இந்திய உணவகங்கள் திண்டாட்டம்

ஊழியர் பற்றாக்குறையால் கடைகள் மூடிக் கிடக்கின்றன

கி.ஜனார்த்­த­னன்

கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லில் இரண்­டா­வது முறை­யாக லிட்­டில் இந்­தியா வட்­டா­ரம் தீபா­வ­ளிக்­குத் தயா­ரா­கிக் கொண்­டி­ருக்­கிறது.

ஆயி­னும் மனி­த­வ­ளப் பிரச்­சி­னை­க­ளால் நெருக்­கு­த­லுக்கு உள்­ளா­கிய சில கடை­கள் அவ்­வப்போது மூட வேண்­டி­யுள்­ளது. பெரும்பாலான கடை­கள் தொடர்ந்து இயங்­கி­வந்­தா­லும் சில சிறிய கடை­கள் மூடப்­பட்­டி­ருப்­ப­தைத் தமிழ் முரசு கண்­ட­றிந்­தது.

சில நாட்­கள் மூடி­யி­ருந்த கோமள விலாஸ் சுமார் ஒரு வாரத் திற்கு முன்பு மீண்­டும் திறக்கப் பட்டது. அதே­போல, ஆனந்த பவன், காயத்­ரிஸ் ஆகிய உண­வ­கங்­களும் சில நாட்கள் மூடப்­பட்டு வருகின்­றன.

ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் இவ்­வாண்டு அதி­கம் பாதிப்பு அடைந்­தி­ருப்­ப­தாக ஆனந்த பவன் உரி­மை­யா­ளர் வீரன் குமார் கூறி­னார்.

"கடந்­தாண்டு கிரு­மிப்­ப­ர­வல் முறி­ய­டிப்­புக் காலகட்­டத்­தில் நமக்கு ஏற்பட்ட கவலை, இப்­போது பன் மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

"இயந்­திர தொழில்­நுட்­பம், திறன்­பேசி மூலமான முன்­ப­தி­வு­கள் போன்ற தொழில்­நுட்ப மேம்­பா­டு­ க­ளில் கவனம் செலுத்தி வந்­தா­லும் தற்­போ­தைய நிலை­யில் ஊழி­யர் தட்டுப் ­பாடு பெரி­தும் பாதிக்­கிறது," என்று அவர் கூறி­னார்.

ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யா­லும் குறைந்த வர்த்­த­கத்­தா­லும் பனானா லீஃப் அப்­போே­லா­வின் லிட்­டில் இந்­தியா ஆர்க்­கேட் கிளை செப் டம்­பர் 27ஆம் தேதி மூடப்­பட்­ட­தாக உரி­மை­யா­ளர் திரு சங்­க­ர­நா­தன் தெரி­வித்­தார்.

அண்­மை­யில் இந்­தி­யர்­களை இங்கு வர­வ­ழைத்து வேலை வாய்ப்பு தரும் அர­சாங்க ஏற்­பாடு அறி­முகம் கண்­டுள்­ள­தால் தற்­போது தளர்ந்து போயி­ருக்­கும் கடை உரிமையாளர்­கள் நம்­பிக்­கை­யு­டன் காத்திருப் பதாக அவர் கூறினார்.

வர்த்­தக பாதிப்­பா­லும் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யா­லும் வர்த்­தக செயல் பாடு­க­ளைச் சுருக்க வேண்டி யிருப்­ப­தாக பிர­சன்­னாஸ் உண­வக நிர்­வாகி முரு­கப்பா பாண்­டியன் தெரி­வித்­தார்.

"வாம்­போ­வி­லுள்ள எனது கிளை ஒன்றை இத­னால் நான் மூட வேண்­டி­யுள்­ளது," என்றார் திரு முரு­கப்பா.

"கடந்­தாண்டு புதிய இந்­திய ஊழி­யர்­களை எங்­க­ளால் வர வழைக்க முடி­ய­வில்லை. இங்­குள்ள மலே­சிய ஊழி­யர்­கள் சிலரை வேலை­யில் அமர்த்தி சமா­ளித்­தோம். அவர்­களும் இப்­போது தாய­கத்திற்­குத் திரும்ப தொடங்­கி­விட்­ட­னர்," என்று அவர் கூறி­னார்.

ஸ்ரீ ஆச்சி ஆப்­பக் கடை, ஆதிரை உண­வ­கம், செந்­தூரா, ராஜ் ஒயின்ஸ் உள்­ளிட்ட சில கடை­கள் மாலை நேரத்­தில் மூடியிருந்­ததை தமிழ் முரசு கண்­ட­றிந்­தது.

தமக்­குப் பிடித்த கடை­களில் ராஜ் ஒயின்ஸ் ஒன்­றாக இருப்­ப­தா­கக் கூறிய சிங்­கப்­பூ­ரர் தீபா சுரேந்­தி­ரன், 33, அங்கு வெளி­நாட்டு ஊழியர்­கள்­தான் அடிக்­கடி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"தமி­ழக பாணி­யில் மதுபானத்­து­டன் 'சிக்­கன் 65' உண்­பது எனக்கு மிக­வும் பிடிக்­கும். போதிய வாடிக்­கை­யா­ளர்­கள் இல்­லா­த­தால் கடை மூடப்பட்டதைக் கேள்­விப் ­ப­டும்­போது எனக்கு வருத்­த­மாக இருக்­கிறது," என்று வங்­கி­யில் பணி­யாற்­றும் அவர் கூறி­னார்.

தமிழ் முர­சி­டம் பேசிய இந்­திய உண­வ­கங்கள் சங்­கத்­தின் தலை­வர் குர்­ச­ரன் சிங், "10 முதல் 15 உணவகங்­கள் கடந்த ஈராண்­டு­களில் மூடப்­பட்­டுள்­ளன. எவ்­வ­ளவோ தாக்­குப்­பி­டிக்க முயற்சி செய்­தா­லும் அவற்­றால் முடி­ய­வில்லை," என்­றார்.

"இது­வரை சர­வண பவன் அடைக்­கப்­பட்­டுள்­ளது. ரிவர்­வாக் தண்­டூ­ரின் கிளை­களும் மூடப்­பட்­டன. ஜக்­கீ­சின் ஒரு கிளை­யும் மூடப்­பட்­டது. இன்­னும் பல சிறிய உண­வகங்­களும் மூடி­யுள்­ளன," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

வர்த்­தக மந்­தத்­தைக் காட்­டி­லும் ஊழி­யர் பற்­றாக்­குறை வர்த்­த­கத்தை அதி­க­மாக பாதித்­தி­ருப்­ப­தாக திரு சிங் சொன்­னார்.

கோம­ளாஸ் உண­வக உரிமை யாள­ரான திரு தன­சே­க­ரன், ஒரு கடையை மட்­டும் வைத்துள்ள உண­வ­கங்­க­ளைக் காட்­டி­லும் பல்­வேறு கிளை­க­ளைக் கொண்­டுள்ள உண­வ­கங்­களே அதிக சிர­மத்தை எதிர்­நோக்­கு­கின்­றன என்­றார்.

"மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக எங்­க­ளுக்கு

10 கிளை­கள் இருந்­தன. இப்­போது ஐந்து கிளை­கள் மட்­டுமே உள்ளன," என்று அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் இந்­திய உண­வக ஊழி­யர் சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் மகேந்­தி­ரன், "எஸ்-பாஸ் பிரி­வின் வழி­யாக மட்­டுமே இந்­தி­யர்­களை அழைத்­து­வர முடி­யும். ஆனால் 'ெவார்க் பர்­மிட்' மூல­மாக இந்­தி­யர்­களை உண­வ­கங்­க­ளுக்கு வர­வ­ழைக்க முடி­யாது. சீன உண­வகங்­களில் தைவான், ஹாங்­காங், மக்­காவ் போன்ற நாடு­க­ளி­லி­ருந்து உண­வக ஊழி­யர்­கள் 'வொர்க் பர்­மிட்' மூல­மாக அழைத்­து­வர முடி­கிறது," என்று கூறி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!