வல்லுநர்கள் கணிப்பு: கட்டுப்பாடுகள் விரைவில் மேலும் தளரும்

சிங்­கப்­பூ­ரில் விரை­வில் மேலும் கட்டுப்­பா­டு­கள் அக­லும் சூழ்­நிலை ஏற்­படும் என்று வல்­லு­நர்­கள் கருத்து கூறி இருக்­கி­றார்­கள்.

இப்­போ­தைய சூழ்­நி­லை­யை­யும் கடந்த மூன்று வார நில­வ­ரங்­க­ளை­யும் கருத்­தில்­கொண்டு பார்க்­கை­யில் கட்­டுப்­பா­டு­கள் அக­லு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் விரை­வில் ஏற்படும் என்று அவர்­கள் கூறு­கிறார்கள். ஓமிக்­ரான் பாதிப்பு எந்த அள­வுக்கு இருக்­கும் என்­பது இனி­மேல்­தான் தெரி­ய­வ­ரும் என்­றா­லும் சில ஊக்­க­மூட்­டும் அறி­கு­றி­கள் தெரி­வ­தாக அவர்­கள் கூறி­னர்.

மேலும் பல­ருக்கு பூஸ்­டர் தடுப்­பூசி போடும் வரை அல்­லது சிறார்­களுக்குத் தடுப்­பூசி போடும்வரை அதி­கா­ரி­கள் காத்­தி­ருந்­தா­லொ­ழிய கட்­டுப்­பா­டு­களைத் தொடர்ந்து வைத்­தி­ருக்க வேறு கார­ணங்­கள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழகத்­தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யின் ஆய்­வுத் துறை துணைத் தலை­வர் இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் குக் கூறு­கி­றார்.

சிங்­கப்­பூர் விரை­வில் மேலும் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தக்­கூ­டிய ஒரு நிலையை நோக்கிச் செல்­கிறது என்­பது பெரும்­பா­லும் நிச்­ச­யம் என்று தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை தொற்­று­நோய் தடுப்­புப் பிரிவு மூத்த ஆலோச­கர் பேரா­சிரி­யர் பால் தம்­பையா தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் கட்­டுப்­பா­டு­களை மேலும் தளர்த்­து­வ­தற்கு எடுக்­கப்­படும் முடிவு என்­பது கொள்கை சார்ந்­த­தாக இருக்­கும் என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அமைச்­சு­கள்­நிலை கொவிட்-19 பணிக்­குழு கடை­சி­யாக நவம்­பர் 22ஆம் தேதி கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யது. ஐவர் வரை ஒன்று கூடு­வ­தற்கு அனு­மதிக்கப்­பட்­டது.

அந்த அறி­விப்பு நவம்­பர் 20ஆம் தேதி வெளி­யா­னது. அப்­போது பேசிய பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், டிசம்­பரில் மேலும் கட்­டுப்­பா­டு­கள் தளர்­வதற்­கான வாய்ப்­பு­கள் இருக்­காது என்று கூறி­னார்.

எல்­லாம் நல்லபடி­யாக நடந்­தால் டிசம்­பர் முடி­வில் அது பற்றி பரி­சீலிக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்து இருந்­தார். கட்டுப்­பா­டு­கள் மீது ஓமிக்­ரான் எந்த அள­வுக்கு ஆதிக்­கம் செலுத்­தும் என்­பது பற்றி கருத்து கூறிய இந்த இரண்டு வல்­லு­நர்­களும், அத­னு­டைய முழு தாக்­கத்­தை­யும் தெரிந்­து­கொள்ள மேலும் காலம் தேவை என்று கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!