கொவிட்-19: இருப்புநிதியிலிருந்து $6பி. எடுக்க அதிபர் அங்கீகாரம்

இவ்­வாண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை அதி­பர் ஹலிமா யாக்­கோப் அங்­கீ­க­ரித்­துள்­ளார். மேலும், கொவிட்-19 நிலை­மை­யைக் கையாள சிங்­கப்­பூ­ரின் இருப்­பு­நி­தி­யி­லி­ருந்து ஆறு பில்­லி­யன் வெள்ளி­யைப் பயன்­ப­டுத்­த­வும் அவர் ஒப்­புதல் வழங்­கி­னார்.

"புதிய இயல்­பு­நி­லையை நோக்கி நாம் சென்­று­கொண்­டி­ருந்­தா­லும் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வது, மருத்­துவ விவ­கா­ரங்­க­ளைக் கவனித்­துக்­கொள்­வது, தடுப்­பூசி போடு­வது, சிகிச்­சை­கள் போன்ற அம்­சங்­க­ளைக் கைவி­டு­வ­தற்­கான நேரம் இன்­னும் வர­வில்லை," என்று திரு­வாட்டி ஹலிமா கூறி­னார்.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லைக் கையாள தொடர்ந்து மூன்­றா­வது நிதி­யாண்­டாக சிங்­கப்­பூர் இருப்­பு­நி­தி­யைப் பயன்­ப­டுத்­து­கிறது. வரவு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாம் அங்கீ­கரிப்­ப­தைத் தெரி­விக்­கும் ஃபேஸ்புக் பதி­வில் அதி­பர் ஹலிமா இதைத் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பாது­காக்­க­வும் நமது பொரு­ளி­யலை மேம்­படுத்­த­வும் இருப்­பு­நி­தி­யி­லி­ருந்து இவ்­வாறு பணம் எடுப்பது தவிர்க்­க­மு­டி­யா­தது," என்று அவர் சொன்­னார்.

இம்­மா­தம் 11ஆம் தேதியன்று வரும் நிதி­யாண்­டுக்­கான 109 பில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நாடா­ளு­மன்றம் அங்­கீ­க­ரித்­தது.

அதற்கு முன் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்ட பொருள், சேவை வரி உயர்வு, வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சம்­பந்­தப்­பட்ட திட்­டங்­கள் உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் ஒன்­பது நாள்­க­ளுக்கு விவா­தங்கள் நடை­பெற்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!