டாக்சி ஓட்டுநரைக் காயப்படுத்திய ஆடவர்

டாக்சி ஓட்­டு­நர் ஒரு­வரை

பிரிட்­டிஷ் நாட்­ட­வ­ரான 60 வயது பால் ஜான் மர்ஃபி காயப்­ப­டுத்­தி­ய­தாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி­யன்று மது­பா­னம் அருந்­தி­விட்டு டாக்­சி­யில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­தார் தனி­யார் முத­லீட்டு நிறு­வ­னம் ஒன்­றின் தலைமை நிர்­வாகி­யான மர்ஃபி.

போக்­கு­வ­ரத்து விளக்கு சிவப்­பாக மாறி­ய­தால் டாக்­சியை ஓட்­டு­நர் நிறுத்­தி­னார். வீட்டை இன்­ன­மும் அடை­யா­த­போ­தி­லும் டாக்­சி­யின் கத­வைத் திறந்­தார் மர்ஃபி. டாக்­சிக்கு பின்­பு­றத்­தி­லி­ருந்து வந்­து­கொண்­டி­ருந்த வாக­னத்­தின் ஓட்­டு­நர் விழிப்­பு­டன் இருந்­த­தால் எதிர்­பா­ராத வித­மாக திறக்­கப்­பட்ட டாக்சி கதவு மீது மோது­வதை அவ­ரால் தவிர்க்க முடிந்­தது.

டாக்­சி­யின் கதவை மூடும்­படி சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான

மர்­ஃபி­யி­டம் டாக்சி ஓட்­டு­நர் எல்­ஜின் லீ கத்தி தொடர்ந்து வசை­பா­டி­னார். லீ சொன்­ன­தைக் கேட்டு டாக்­சி­யின் கதவை மர்ஃபி மூடி­னார். ஆனால் பிறகு லீ வாக­னத்தை ஓட்­டிக்­கொண்­டி­ருந்­த­போது மர்ஃபி அவ­ரைத் தாக்­கி­னார்.

லீயின் இடது தோள்­பட்­டை­யில் காயம் ஏற்­பட்­டது. டாக்­சியை நிறுத்தி மர்­ஃபியை அவர் இறங்­கச் சொன்­னார். அவ­ரி­ட­மி­ருந்து அவர் டாக்சி கட்­ட­ணத்­தைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.

தாங்க முடி­யாத வலி­யால் தாம் அவ­தி­யுற்­ற­தாக லீ தெரி­வித்­தார். லீயை அவ­ரது நண்­பர்­கள் இரு­வர் மவுண்ட்

அல்­வெர்­னியா மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

அங்கு அவ­ரது இடது தோள்­பட்­டை­யில் காயம் ஏற்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. லீக்கு 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி­யி­லி­ருந்து 20ஆம் தேதி வரை மருத்­து­வ­மனை விடுப்பு வழங்­கப்­பட்­டது.

மர்ஃபி வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­தார் என்று தீர்ப்­ப­ளித்த மாவட்ட நீதி­பதி ஓங் சின் ரு தெரி­வித்­தார்.

அது­மட்­டு­மல்­லாது, கவ­னக்­

கு­றை­வு­டன் அவர் நடந்­து­கொண்­ட­போது மற்­ற­வர்­க­ளு­டைய உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் நீதி­பதி கூறி­னார்.

டாக்சி கதவை மூடி­ய­தும் லீயி­டம் தாம் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­ட­தாக மர்ஃபி தெரி­வித்­தார். ஆனால் லீ தொடர்ந்து தம்­மைத் தகாத வார்த்­தை­க­ளால் திட்­டி­ய­தாக அவர் கூறி­னார்.

வழக்­க­றி­ஞர்­கள் பிர­தாப் கிஷ­னும் நிர்­மல் சிங்­கும் மர்­ஃபி­யைப் பிர­தி­நி­திக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!