தெம்பனிஸ் முழுவதும் 2024ல் உணவுக்கழிவை உரமாக்கும் திட்டம்

விர­ய­மா­கும் உண­வுப் பொருள்­களைத் தண்­ணீ­ரா­க­வும் எரு­வா­க­வும் மாற்­றும் ஒரு முன்­னோ­டிச் செயல்­திட்­டம் தெம்­ப­னிஸ் நகர் முழு­வ­தி­லும் இருக்­கும் எல்லா அக்­கம்­பக்­கங்­க­ளுக்­கும் 2024 வாக்­கில் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று தெம்­பனிஸ் நகர மன்­றம் நேற்று அறிக்­கை­யில் தெரிவித்­தது.

தெம்­ப­னிஸ் மேற்­கில் உள்ள அக்­கம்­பக்க மையம் ஒன்­றில் அமைக்­கப்­பட்­டுள்ள 'விரய உணவுச் செரிமான' இயந்­தி­ரத்தைச் சென்ற ஆண்டு முதல் ஆறு நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

நாள் ஒன்­றுக்கு 400 கிலோ உண­வுக்­க­ழிவுகளை அந்த இயந்­தி­ரம் மூலம் அவை பய­னுள்ள பொருள்க­ளாக மாற்­று­கின்­றன. இந்­தச் செயல்­திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படுவதைப்­பற்றி அறி­விப்­ப­தற்­காக நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்­தது.

தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மசகோஸ் ஸுல்­கி­ஃப்லி அதில் கலந்­து­கொண்­டார். உண­வுக் கழிவு­களை அதே இடத்­தில் ஒழுங்­கு ­ப­டுத்­து­வ­தால் கரி­மக் கழி­வு­க­ளைக் குறைக்­க­லாம்.

அவற்றை வேறு இடங்­க­ளுக்­குக் கொண்டுசெல்ல வேண்­டிய தேவை இல்லை என்­ப­தால் செல­வும் குறை­யும் என்றாரவர்.

இந்த முன்­னோடி செயல்­திட்­டம், தெம்­ப­னிஸ் கிழக்­கில் உள்ள எண்2, தெம்­ப­னிஸ் வடக்­கில் உள்ள எண்4, தெம்­ப­னிஸ் சுங்­காட்­டில் உள்ள ஓர் அக்­கம்­பக்க மையம் ஆகி­ய­வற்­றுக்கு நீட்­டிக்­கப்­படும்.

'விரய உண­வுச் செரி­மான' இயந்­தி­ரத்­தின் விலை சுமார் $100,000 ஆகும். அது 2019ல் ஆறு மாத காலம் சோதிக்­கப்­பட்­டது. பிறகு சென்ற ஆண்டு ஜன­வ­ரி­யில் அந்த இயந்­தி­ரம் தெம்­ப­னி­சில் புளோக் 823 ஏ குப்­பைக்­கூ­டத்­தில் பொருத்­தப்­பட்­டது. நுண்­ணு­யி­ரி­க­ளைப் பயன்படுத்தி நாள் ஒன்­றுக்கு 400 கிலோ உண­வுக் கழி­வு­களை அது தண்­ணீ­ரா­க­வும் உர­மா­க­வும் மாற்றி­ வி­டும். அப்­படி உரு­வாக்­கப்­படும் தண்­ணீரை குடிக்க முடி­யாது.

அது வடி­கால்­களில் விடப்­படும். கிடைக்­கும் உரம் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு விநி­யோ­கிக்­கப்­படும். உரத்தை நகர மன்­றம் நிலப் பரா­ம­ரிப்­புக்­கா­கப் பயன்­ப­டுத்­து­கிறது. உணவு கழி­வுப்­பொ­ருள்­களில் சுமார் 10% முதல் 15% இப்­படி உர­மாக மாற்­றப்­ப­டு­கிறது.

தெம்­ப­னி­சில் ஆறு காப்­பிக்­கடை­களும் இதர உணவு சில்­லறை வர்த்­த­கக் கடை­களும் அந்த இயந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்­தத் தொடங்­கும் என்று நகர மன்­றம் தெரி­வித்­தது. அந்த இயந்­தி­ரம் இது­வரை 15 மாதங்­களில் ஏறத்­தாழ 44,100 கிலோ உணவு கழி­வுப்­பொ­ருள்­களைத் தண்­ணீ­ரா­க­வும் உர­மா­க­வும் மாற்றி இருக்­கிறது.

இத­னி­டையே, இது பற்றி கருத்து தெரி­வித்த தெம்­ப­னிஸ் மேற்கு வர்த்­த­கச் சங்கத் தலை­வ­ரான ஆங் கிங் கியோங், 60, இந்த இயந்­தி­ரம் துர்­நாற்­றத்தைக் குறைத்து­வி­டு­கிறது. கரப்­பான்­பூச்சி போன்ற பூச்சித் தொல்லை­களும் இத­னால் குறைந்து­வி­டு­கிறது என்று கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் மொத்த கழி­வுப்­பொ­ருள்­களில் ஏறத்­தாழ 11% விர­ய­மா­கும் உண­வாக இருக்­கிறது. 2020ல் சிங்­கப்­பூ­ரில் மொத்த கழி­வுப்­பொ­ருள்­ ஏறக்­கு­றைய 665,000 டன்­னாக இருந்­தது. அதில் ஏறத்­தாழ 126,000 டன் மறு­பு­ழக்­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது என்று தேசிய சுற்­றுப்­புற முகவை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!