‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் கருத்துத் திரட்டு

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் ஓராண்டு இடம்­பெ­ற­வி­ருக்­கும் கருத்து திரட்­டும் நட­வ­டிக்கை ஒன்­றில் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் குழுவை வழி­ந­டத்­த­ இருக்­கி­றார்.

'ஃபார்வர்ட் சிங்­கப்­பூர்' எனப்­படும் முன்­னே­றும் சிங்­கப்­பூர் திட்­டம், குடி­மக்­க­ளின் அக்­க­றை­களை புரிந்­து­கொள்­வ­தி­லும் அவர்­க­ளின் கருத்­து­க­ளுக்­குச் செவி­ம­டுப்­ப­தி­லும் கவ­னம் செலுத்­தும். வருங்­கா­லச் சவால்­களை எதிர்­கொள்­ளும் வேளை­யில் சிங்­கப்­பூ­ரர்­கள் ஒற்­று­மை­யு­டன் இருப்­ப­தற்கு உத­வும் வகை­யில் பல்­வேறு கொள்­கை­கள் குறித்து ஆய்­வு­செய்து தேவைப்­படும் மாற்­றங்­க­ளைப் புகுத்­த­வும் இந்­தத் திட்­டம் வழி­வ­குக்­கும்.

ஆறு முக்­கிய அம்­சங்­க­ளின்­கீழ் பிரச்­சி­னை­களை அடை­யா­ளம்­கண்டு ஆய்­வு­செய்­வ­தில் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் இணைந்து செயல்­படு­வர் என்று தொடர்பு, தக­வல் அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

வலுப்படுத்து­தல், ஆற்றலளித்தல், பரா­ம­ரித்தல், உரு­வாக்­கு­தல், வழிநடத்துதல், ஒன்­றிணைத்தல் ஆகி­யவை இந்த முக்­கிய அம்­சங்­கள்.

பொரு­ளி­யலும் வேலைகளும் குறித்து ஆரா­யும் வலுப்படுத்துதல் பிரி­விற்கு மனி­த­வள அமைச்­சர் டாட் சீ லெங், தேசி­யத் தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங், மனி­த­வள, நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை­ய­மைச்­சர் கோ போ கூன் ஆகி­யோர் தலை­மை­தாங்­கு­வர்.

நிச்­ச­ய­மற்ற சூழ­லில் பொரு­ளி­யல் போட்­டித்­தன்மை அதி­க­ரித்­துள்ள நிலை­யில், ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரும் வாழ்­நாள் முழு­மைக்­கும் வேலை­வாய்ப்­பைப் பெறும் வகை­யில் வலுவூட்­டு­வது இந்­தப் பிரி­வின் இலக்கு.

ஆற்றலளித்தல் பிரி­விற்கு கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், தற்­காப்பு, மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முக­மது, தொடர்பு, தக­வல், தேசிய வளர்ச்சி மூத்த துணை­ய­மைச்­சர் டான் கியட் ஹாவ் ஆகி­யோர் தலைமை வகிப்­பர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் எந்­த­வித வாழ்க்­கைப் பின்­ன­ணி­யில் இருந்து வந்­த­வர்­கள் என்­றா­லும் தங்­கள் கன­வு­க­ளைப் புரிந்­து­கொண்டு அதற்­கான திறன்­களைக் கைக்­கொண்டு வளர்ச்­சிப் பாதை­யில் செல்ல வகை­செய்­வதை கல்வியும் வாழ்நாள் கற்றலுக்குமான இந்தப் பிரிவு இலக்­கா­கக் கொண்­டி­ருக்­கும்.

பரா­ம­ரித்தல் பிரி­விற்கு சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­ச­ரும் இரண்­டாம் சுகா­தார அமைச்­ச­ரு­மான மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, நிதி, தேசிய வளர்ச்சி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா ஆகி­யோர் பொறுப்பு வகிப்­பர்.

சிங்­கப்­பூ­ரர் ஒவ்­வொ­ரு­வ­ரும் திருப்­தி­யான வாழ்க்­கையை வாழ­வும் மேம்­பட்ட முறை­யில் தங்­க­ளை­யும் தங்­க­ளைச் சுற்­றி­யுள்­ளோ­ரை­யும் பரா­ம­ரிக்­க­வும் கைகொ­டுப்­பது சுகாதாரமும் சமூக ஆதரவும் தொடர்பான இதன் இலக்கு.

உரு­வாக்­கு­தல் பிரிவை தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, வெளி­யுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை­ய­மைச்­சர் சிம் ஆன் ஆகி­யோர் வழி­ந­டத்­து­வர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்க்­கைச் சூழலை உரு­மாற்றி வருங்­கா­லத்­தில் அனை­வ­ருக்­கும் மேம்­பட்ட வசிப்­பி­டத்தை உரு­வாக்­கித்­ த­ரு­வதும் இல்­ல­மும் வாழும் சூழ­லும் தொடர்­பான இந்­தப் பிரி­வின் இலக்கு.

வழி­ந­டத்­து­தல் பிரிவு சுற்­றுச்­சூ­ழ­லும் நிதி நிலைத்தன்­மை­யும் குறித்து ஆய்­வு­செய்­யும்.

நீடித்த, நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ, நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின், நிதி, போக்­கு­வ­ரத்து மூத்த துணை­ய­மைச்­சர் சீ ஹொங் டாட் ஆகி­யோர் இந்தப் பிரிவிற்குத் தலைமை வகிப்­பர்.

வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்­காக நாட்­டின் வளங்­க­ளைப் பொறுப்­பான முறை­யில் கையாண்டு மேலும் நீடித்த நிலைத்­தன்மை மிக்க வாழ்க்­கை­மு­றை­யைப் பேணு­வது இதன் இலக்கு.

இறு­தி­யாக, சிங்­கப்­பூர் அடை­யா­ளத்­துக்­கான ஒன்­றி­ணைத்­தல் பிரி­விற்கு கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­சர் எட்­வின் டோங், கல்வி, வெளி­யு­றவு இரண்­டாம் அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான், தொடர்பு, தக­வல், சுகா­தார மூத்த துணை­ய­மைச்­சர் ஜனில் புதுச்­சேரி ஆகி­யோர் பொறுப்பு வகிப்­பர்.

சிங்­கப்­பூ­ரர் என்ற அடை­யா­ளம், சிங்­கப்­பூர்க் குடி­யு­ரிமை மீதான கடப்­பாடு, பரஸ்­பர நல­னில் பொறுப்பு வகித்­தல் போன்­ற­வற்­றைப் பேணு­வதை இலக்­கா­கக் கொண்டு இந்­தப் பிரிவு செயல்­படும்.

அடுத்த ஆண்டு மத்­தி­யில் இந்த ஓராண்டு கருத்­துத் திரட்­டும் இயக்­கம் நிறை­வு­றும்­போது சிங்­கப்­பூ­ரின் கொள்­கை­கள் தொடர்­பான பரிந்­து­ரை­களை அடக்­கிய அறிக்கை தயா­ரிக்­கப்­படும். சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே பொது­வான விழு­மி­யங்­கள், நடை­மு­றை­கள், மக்­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்பு குறித்த புரி­தல் ஆகி­ய­வற்­றைத் தெரிந்­து­கொள்ள இது உத­வும்.

நாட்­டின் பொது இலக்­கு­க­ளுக்­குப் பங்­க­ளிக்க சமூ­கத்­தின் பல்­வேறு பிரி­வி­னர் எவ்­வாறு கூடு­த­லா­கச் செய­லாற்­ற­லாம் என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள இந்தக் கருத்துத் திரட்டு வகை­செய்­யும் என்று கருதப்படுகிறது.

சிங்­கப்­பூ­ரர்­கள் இவை தொடர்­பான கருத்­து­க­ளை­யும் யோச­னை­களை­யும் பகிர்ந்­து­கொள்ள முன்­வ­ர­வேண்­டும் என்று அமைச்­சு­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ளன.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு 'www.forwardsingapore.sg' என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் இடம்பெறும் புதிய நடவடிக்கை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!