மூன்றாவது நீச்சல் வீரருக்கும் எதிராக நடவடிக்கை

கஞ்சா புழங்­கி­ய­தாக ஒப்­புக்­கொண்டதை அடுத்து தேசிய நீச்சல் வீரர்­க­ளான ஜோசஃப் ஸ்கூலிங், அமண்டா லிம் ஆகிய இருவருக்­கும் உரிய ஆத­ரவு அக்டோ­பர் 1ஆம் தேதி முதல் ஒரு­மா­தம் காலம் ரத்து செய்­யப்­படும் என்று ஸ்போர்ட் சிங்­கப்­பூர் (ஸ்போர்ட்­எஸ்ஜி) அறி­வித்துள்­ளது.

சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் தாங்­கள் போதைப்­பொ­ரு­ளைப் புழங்­கி­ய­தாக ஆகஸ்ட் 30ஆம் தேதி அவ்­வி­ரு­வ­ரும் ஒப்­புக்­கொண்­ட­னர். அந்த இரு­வ­ருக்கும் எச்­ச­ரிக்கை கடி­தங்­க­ளை­யும் ஸ்போர்ட் சிங்­கப்­பூர் பிறப்­பித்­தது.

விளை­யாட்டு வீரர்கள் உடன்­பாட்டை மீறிச் செயல்­பட்­ட­தற்­காக தியோங் ஸென் வெய் என்ற தேசிய நீச்­சல் வீர­ரும் தண்­டிக்­கப்­பட்­ட­தாக அந்த அமைப்பு தெரி­வித்­தது.

அந்த மூவ­ரை­யும் போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளை­ஒட்டி மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு விசா­ரித்­தது.

அவர்­கள் மூன்று பேரின் சிறு­நீ­ரும் சோதிக்­கப்­பட்­டது. ஆனால், அதில் போதைப் புழக்­கத்­திற்­கான அறி­குறி தெரி­ய­வில்லை.

இருந்­தா­லும் சிங்­கப்­பூரை பிரதி­நிதித்து வெளி­நாட்­டில் விளை­யாட்டில் கலந்­து­கொண்­ட­போது சட்டவிரோத போதைப்­பொ­ரு­ளைத் தாங்­கள் புழங்­கி­ய­தாக அந்த மூவரும் ஒப்­புக்­கொண்­ட­னர்.

ஸ்கூ­லிங், 27, லிம், 29, தியோங், 24, ஆகிய மூவ­ரை­யும் தனது உள்­வி­சா­ர­ணை­யை­யொட்டி தான் சந்­தித்­த­தா­க­வும் அந்த விசா­ரணை சென்ற வாரம் முடிந்­த­தா­க­வும் ஸ்போர்ட் சிங்­கப்­பூர் தெரி­வித்­தது.

விளை­யாட்டு வீரர்கள் உடன்பாட்­டின் ஒரு பகு­தி­யாக அவர்­கள் பல நடத்தை நிய­தி­களை நிறை­வேற்ற வேண்­டும். ஆனால், அதி­லி­ருந்து அவர்­கள் தவ­றி­விட்­டார்­கள் என்பது விசா­ரணை மூலம் தெரி­ய­வந்­த­தாக ஸ்போர்ட் சிங்­கப்­பூர் கூறி­யது.

இப்­படி நிய­தி­களை மீறி விளை­யாட்டு வீரர்­கள் நடந்­து­கொள்­வதை கடு­மை­யான ஒன்­றாக இந்த அமைப்பு கரு­து­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!