இணையவழி தீங்குகளை எதிர்கொள்ள புதிய சட்டம்

மோச­டி­கள், இணைய சூதாட்­டம், பாலி­யல் வன்­கொ­டுமை சம்­பந்­தப்­பட்ட பொருள்­கள் விநி­யோ­கம், வெளி­நாட்­டுத் தலை­யீடு போன்ற இணை­ய­வழிக் குற்றச்செயல்­கள் தொடர்ந்து உரு­மாறி வரு­கின்­றன.

இத்­த­கைய குற்­றச்­செ­யல்­களை எதிர்­கொள்­வ­தில் குறை­பா­டு­கள் இருப்­ப­தாக உள்­துறை இரண்­டாம் அமைச்­சர் ஜோசஃபின் டியோ கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பாது­காப்­புக்கு இவை மிரட்­டல் விடுப்­பதால், உடல் ரீதி­யி­லான மிரட்­டல்­கள் எதிர்­கொள்­ளப்­படும் அதே விதத்­தில் இவை எதிர்­கொள்­ளப்­பட வேண்­டும் என்­றார் அவர்.

இதன் பொருட்டு, இணை­ய­வழிக் குற்­றச்­செ­யல் தீங்­கு­கள் சட்­டத்தை உள்­துறை அமைச்சு இவ்­வாண்டு அறி­மு­கப்­ப­டுத்தும் என்று திரு­மதி டியோ தெரி­வித்­தார்.

உள்­துறை அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய அவர், “இணை­யத்தளத்­தில் தொழில்­நுட்­பம் கடைப்­பி­டிக்­கப்­படு­வ­தில் அர­சாங்­கம் உத்­த­ர­விடவோ கட்­டுப்­பா­டு­களை விதிக்­கவோ இல்லை.

“எனி­னும், உடல் ரீதி­யி­லான மிரட்­டல்­க­ளைப் போலவே இணை­யத் தீங்­கி­லி­ருந்­தும் குடி­மக்­களைப் பாது­காப்­ப­தில் எங்­க­ளுக்­குக் கடமை உள்­ளது,” என்று திரு­மதி டியோ விவ­ரித்­தார்

முன்­மொ­ழி­யப்­பட்ட சட்­டம், இணை­யக் குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பொருந்­தக்­கூ­டிய ஒழுங்­கு­முறை அம்­சங்­களை விரி­வு­ப­டுத்­தும். கூடு­த­லான பிரி­வு­களுக்கு எதி­ராக அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க முடி­யும். இணை­யத் தீங்­கு­க­ளைத் திறம்­படக் கையாள அச்­சட்­டம் நட­வடிக்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­தும்.

வன்­மு­றை­யைத் தூண்­டு­தல் போன்று நிதர்சன உல­கில் குற்றச்­செயல்­களை ஒருங்­கி­ணைக்­கும் தொடர்­பு­களை நிறுத்த அல்­லது நீக்க அதி­கா­ரம் வழங்­கப்­படும்.

முன்­மொ­ழி­யப்­பட்ட சட்­டம், அனைத்து வகை இணை­யத் தொடர்­பு­க­ளை­யும் உள்­ள­டக்­கும். மோச­டி­கள் போன்ற அதி­ந­வீன இணைய நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­ட­றிந்து அவற்­றைக் குறைப்­பதற்­கான நட­வ­டிக்­கை­களை சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தும்.

தீங்கு விளை­விக்­கும் வெவ்­வேறு வகையான இணைய உட்­பொருள்­க­ளை­யும் நடத்­தை­யை­யும் கையாள காலப்­போக்­கில் அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுத்து வந்­துள்­ள­தாக திரு­மதி டியோ கூறி­னார்.

எனி­னும், அவற்­றைக் கையாளு­வ­தில் இன்­னும் குறை­பா­டு­கள் இருப்­ப­தா­கச் சொன்ன அவர், குற்­றச்­செ­யல்­க­ளைத் தூண்­டும் இணைய உட்­பொ­ருள் இன்­னும் உள்­ள­தா­கக் கூறி­னார்.

குறிப்­பாக, ‘லூட் பாக்­சஸ்’ போன்ற உரு­மா­றி­வ­ரும் இணைய சூதாட்ட போக்கை உள்­துறை அமைச்சு அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக திரு­மதி டியோ தெரி­வித்­தார்.

“சூதாட்ட விதி­க­ளின் செயல்­தி­றனை நாங்­கள் தொடர்ந்து கண்­கா­ணித்து, ஒழுங்­கு­முறை குறித்த அணு­கு­மு­றை­யைத் தேவைக்­கேற்ப புதுப்­பிப்­போம்,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!