கொசுத் தொல்லை நீங்க ‘வொல்பாக்கியா’ விரிவாக்கம்

வொல்­பாக்­கியா திட்­டம் சிங்கப்பூரில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான குடி­யிருப்­பா­ளர்­க­ளுக்­குப் பல­னைத் தந்­துள்­ளது.

இத்­திட்­டத்­தின்­கீழ் வொல்­பாக்­கியா பக்­டீ­ரியா செலுத்­தப்­பட்ட ஆண் கொசுக்­கள் வெளியே விடப்­ப­டு­கின்­றன.

இந்த ஆண் கொசுக்­க­ளு­டன் ஏடிஸ் பெண் கொசுக்­கள் இனப் பெருக்­கத்­தில் ஈடு­ப­டும்­போது அவற்­றின் முட்­டை­கள் குஞ்சு பொரிக்­காது.

டெங்கிக் காய்ச்­சலை ஏற்­ப­டுத்­தும் ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­தால் அந்­நோயால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் சரிவு காணும் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்த வொல்­பாக்­கியா திட்­டம் 13 வட்­டா­ரங்­களில் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களில் 30 விழுக்­காட்டு கட்­ட­டங்­க­ளி­லும் தனி­யார் தரை வீடு­களில் பத்து விழுக்­காட்டு வீடு­க­ளி­லும் இந்தத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. இந்­நி­லை­யில், தெம்­ப­னிஸ், ஈசூன், சுவா சூ காங், புக்­கிட் பாத்­தோக் ஆகிய வட்­டா­ரங்­களில் ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை 90 விழுக்­காடு சரிந்­திருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வட்­டா­ரங்­களில் டெங்கிக் காய்ச்­ச­லால் அவ­தி­யு­று­வோர் எண்­ணிக்கை 88 விழுக்­காடு குறைந்­துள்­ளது.

திட்­டம் செயல்படுத்தப்பட்ட இந்த வட்­டா­ரங்­களில் 96 விழுக்­காடு குடி­யி­ருப்­பா­ளர்­கள் வொல்­பாக்­கியா திட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாக ஆய்வு தெரி­விக்­கிறது.

திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து பெறப்­படும் தர­வு­களை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் ஆய்வு செய்து ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைக்க மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களை அவற்றைப் பயன்படுத்தி மேம்­படுத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. கூடுதல் வொல்பாக்கியா கொசுக்களை வெளியே விட தனது பங்காளிகளுடன் வாரியம் இணைந்து செயல்படும்.

இத்திட்டத்துக்குத் தானியங்கி முறையும் பயன்படுத்தப்படக்கூடும் என்று அறியப்படுகிறது.

ஜென் சிங்­கப்­பூர் தங்­ளின் ஹோட்­ட­லில் நேற்று காலை நடை­பெற்ற ஏழா­வது சிங்­கப்­பூர் அனைத்­து­லக டெங்­கிப் பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்ட நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சின் மூத்த நாடா­ளு­மன்றச் செய­லா­ளர் பே யாம் கெங், வொல்­பாக்­கியா திட்­டத்­தால் ஏற்­பட்­டுள்ள நன்­மை­களை மேற்­கோள் காட்­டி­னார்.

அடுத்த சில ஆண்­டு­களில் மேலும் பல வட்­டா­ரங்­க­ளுக்கு இத்­திட்­டத்தை விரி­வு­ப­டுத்த தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

வொல்­பாக்­கியா திட்­டம் பற்றி முத­லில் சில குடி­யி­ருப்­பா­ளர்­களுக்­குத் தெரி­ய­வில்லை என்­றும் திடீ­ரெ­ன்று நிறைய கொசுக்­களைத் தங்கள் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் பார்த்­த­தும் அவர்­கள் பதற்­றம் அடைந்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரில் 32,000 டெங்கி சம்­ப­வங்­கள் பதி­வா­கின. அத்­து­டன் அந்­நோ­யால் 19 பேர் மாண்­ட­னர்.

டெங்­கி­யால் 2021ஆம் ஆண்­டில் பதி­வான மர­ணங்­க­ளை­விட இது நான்கு மடங்கு அதி­கம்.

இம்­மா­தம் 5ஆம் தேதி நில­வரப்­படி இவ்­வாண்­டில் இதுவரை 2,944 பேருக்கு டெங்கி காய்ச்­சல் ஏற்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!