வளர்ச்சிக் குறைபாடுள்ள பாலர் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவு

வளர்ச்­சிக் குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்­டுள்ள சிறார்­கள் பாலர் பள்ளி வகுப்­ப­றை­களில் கூடு­தல் ஆத­ர­வைப் பெற உத­வும் முன்­னோ­டித் திட்­டம் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டுள்­ளது.

வளர்ச்சி ஆத­ரவு நிபு­ணத்­துவத் திட்­டம் என்­பது அதன் பெயர்.

‘என்­டி­யுசி ஃபர்ஸ்ட் கேம்­பஸ்’ பாலர் பள்ளி, இவ்­வாண்டு ஜன­வரி மாதம் அத்­திட்­டத்­தைத் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் அது தொடங்­கப்­பட்­டது.

வளர்ச்­சிக் குறை­பாடு உள்ள பிள்­ளை­களை வகுப்­ப­றை­யில் மேம்­பட்ட முறை­யில் ஈடு­ப­டுத்த உத­வும் வளங்­களை ஆசி­ரி­யர்­களுக்கு வழங்­கு­வது அத்­திட்­டத்­தின் நோக்­கம்.

தற்­போது அதில், ஏழு ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ நிலை­யங்­களைச் சேர்ந்த 60 பிள்­ளை­களும் 50 கல்­வி­யா­ளர்­களும் பங்­கு­பெ­று­கின்­ற­னர். ஜூலை மாதம் மேலும் ஒரு நிலை­யம் சேர்த்­துக்­கொள்­ளப்­படும்.

கண்-கை ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்கை, உணவு உட்­கொள்­ளல் போன்ற அன்­றாட வாழ்க்கை தொடர்­பான நட­வ­டிக்­கை­கள், தொடர்­புத்­தி­றன் போன்­ற­வற்றை மேம்­ப­டுத்த ஒவ்­வொரு குழந்­தைக்­கும் உகந்த தனிப்­பட்ட இலக்­கு­களை அடை­யா­ளம்­காண பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு அந்த நிபு­ணத்­து­வக் கல்­வி­யா­ளர்­கள் உத­வு­வர்.

வகுப்­பறை நிர்­வா­கத்தை மேம்­ப­டுத்­த­வும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு அவர்­கள் ஆலோ­சனை கூறு­வர்.

தொடக்க நிகழ்ச்­சி­யில், சமு­தாய, குடும்ப மேம்­பாட்­டுத் துணை­ய­மைச்­சர் சுன் ஷுவெலிங் கலந்­து­கொண்­டார்.

அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய பாலர் பள்­ளி­கள், வளர்ச்­சிக் குறை­பாடு உள்ள பிள்­ளை­களுக்கு மேம்­பட்ட ஆத­ரவு ஆகி­யவை தொடர்­பில் ‘எக்டா’ எனப்­படும் பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு மேற்­கொள்­ளும் முயற்சி­க­ளுக்கு, புதிய வளர்ச்சி ஆத­ரவு நிபு­ணத்­து­வத் திட்­டம் வலு­சேர்ப்­ப­தாக அவர் தமது உரையில் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!