இரண்டாவது காலாண்டில் 0.3% வளர்ச்சி; மந்தத்தில் சிக்காமல் தப்பிய பொருளியல்

சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இரண்டாவது காலாண்டில் 0.3% வளர்ச்சி கண்டது.

ஆகையால், பொருளியல் மந்தம் ஏற்படக்கூடிய நிலை நூலிழையில் அகன்றுவிட்டது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக வளர்ச்சி சுருங்கினால் பொருளியல் மந்தத்தில் சிக்குவதாகக் கருதப்படும்.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பார்க்கையில், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.7% அதிகரித்தது.

வர்த்தக, தொழில் அமைச்சின் முன்னோட்டப் புள்ளிவிவரங்கள் மூலம் இவை தெரிய வருகின்றன.

பொருளியல் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.4% சுருங்கிவிட்டது. பொருளியல் அதற்கு முந்திய ஆண்டில் 2.1% வளர்ச்சி கண்டு இருந்தது.

காலாண்டு அடிப்படையில் பொருளியல் 0.4% சுருங்கியது. 2022 நான்காவது காலாண்டில் அது 0.1% வளர்ச்சி கண்டிருந்தது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளியல் சுருங்கியது. சிங்கப்பூரின் உலக ஏற்றுமதிகளுக்கான தேவையும் பலவீனமாக இருந்தது.

ஆகையால், அடுத்த காலாண்டிலும் பொருளியல் சுருங்கி மந்தத்தில் சிக்கிவிடக்கூடிய சூழல் ஏற்படக்கூடிய நிலை இருந்தது.

காலாண்டு அடிப்படையில் 2023 இரண்டாவது காலாண்டில் பொருளியல் 0.2% சுருங்கும் என்று புளூம்பர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், 2023 இரண்டாவது காலாண்டில் 0.3% வளர்ச்சி ஏற்பட்டதால் மந்தச் சூழல் அகன்றது.

இருந்தாலும்கூட, சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி வாய்ப்புகள் இன்னமும் அவ்வளவு அதிகமாக இல்லை என்றுதான் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் உற்பத்தித்துறை மேலும் பலவீனமடைந்தது. அதேவேளையில், சேவைத் துறை ஏறுமுகமாகி வியப்பளித்தது.

இந்த நிலவரம் பற்றிக் கருத்து தெரிவித்த பார்க்லேஸ் வங்கியின் மூத்த பொருளியல் வல்லுநர் பிரையன் டான், சேவைத் துறை மேம்பட்டதால் பொருளியல் வளர்ச்சி சாத்தியமானதாகக் கூறினார்.

என்றாலும்கூட, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பொருளியல் சென்ற ஆண்டு அளவிற்கு இந்த ஆண்டில் வளராது என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டில் 0.5% முதல் 2.5% வரை வளரும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஏற்கெனவே கணித்து இருக்கிறது.

இருந்தாலும், அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில், இந்த வளர்ச்சிக் கணிப்பு பற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உறபத்தித்துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.5% சுருங்கியதாக அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இறக்கம், முந்திய காலாண்டில் 5.3% ஆக இருந்தது.

அதே காலகட்டத்தில் சேவைத் துறைகள், மொத்த விற்பனை, சில்லறை வணிகம், போக்குவரத்து சேமிப்புக் கிடங்குத் துறைகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மொத்தமாக 2.6% வளர்ச்சி கண்டன.

இவை முந்திய காலாண்டில் 07% சுருங்கி இருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!