மனநலப் பிரச்சினை: அதிகமானோர் வேலையிடப் பாகுபாட்டால் பாதிப்பு

சிங்கப்பூரில் வேலை தேடிய, வேலை பார்க்கும் ஊழியர்கள் அதிகமானோர் வேலையிடப் பாகுபாட்டுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதற்கு மனநலப் பிரச்சினை ஒரு முக்கிய, பொதுவான காரணமாகச் சொல்லப்படுகிறது.

2021ஆம் ஆண்டைக் காட்டிலும் மனநலம் தொடர்பில் 2022ல் அதிக ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஆனால், தனிப்பட்ட குணாதிசயங்களால் பாகுபாட்டைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நியாயமான வேலை வாய்ப்பு விதிமுறைகளை முதலாளிகள் பின்பற்றியதாலும் வேலையிடப் பாகுபாட்டை நிர்வகிப்பதற்கான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும் பாகுபாடு குறைந்துள்ளது என்று மனிதவள அமைச்சின் வேலைவாய்ப்பு நடைமுறை அறிக்கை தெரிவித்தது.

பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஊழியர்கள் உதவி நாடியிருக்கின்றனர். 2022ஆம் ஆண்டில் 35.3 விழுக்காட்டினர் இதற்கு உதவி கோரியுள்ளனர். ஆனால் இது, 2021ல் 20 விழுக்காடாக இருந்தது என்று அறிக்கை கூறியது.

இத்தகைய அறிக்கை வெளியிடப்படுவது 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு இது மூன்றாவது முறை. தொழிலாளர் சந்தையில் முழுநேர தேசிய சேவையாளர்கள் நீங்கலாக தற்போதுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட 3,600 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளிடையே ஆய்வு நடத்தப்பட்டது.

வயது, இனம், மனநலம் ஆகிய மூன்று பொதுவான காரணங்களால் வேலையிடத்தில் ஊழியர்கள் பாகுபாட்டைச் சந்தித்துள்ளனர்.

2022ல் வேலை தேடுவோரில் ஐந்து விழுக்காட்டினர் தங்களுடைய மனநலம் தொடர்பில் பாகுபாடு காட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் 2021ஆம் ஆண்டில் இது 2.9 விழுக்காடாக இருந்தது.

முதலாளிகளிடையே ஊழியர்களின் மனநலம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்ததே இதற்கு ஒரு காரணம் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

வேலை தேடும்போது பாகுபாட்டுக்கு வயதும் ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் வேலை தேடியவர்களில் 16.6 விழுக்காட்டினர் வயது காரணமாக பாரபட்சம் காட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இது, 2021ஆம் ஆண்டில் 18.9 விழுக்காடாக இருந்தது.

இரண்டாவது பொதுவான காரணமாக இனம் இருந்துள்ளது. 2022ல் வேலை தேடியவர்களில் 7.1 விழுக்காட்டினர் இனம் தொடர்பாக பாகுபாடு காட்டப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆயினும், 2021ஆம் ஆண்டின் 6.3 விழுக்காட்டுடன் ஒப்பிட்டதில் தற்போது குறைந்துள்ளது.

மூன்றாவது பொதுவான காரணமாக மனநலம் இருந்துள்ளது.

வேலை வாய்ப்பு விளம்பரங்களில் இடம்பெற்ற சில குறிப்பிட்ட தகுதிகள் வேலை தேடுவோருக்கு பாகுபாடு காட்டுவதாக அமைந்தன என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!