நிதிக் குற்றங்களுக்காக ஆக அதிக தண்டத் தொகையை விதித்தது நாணய ஆணையம்

2022 ஜனவரி முதல் இவ்வாண்டு ஜூன் வரை, இதற்கு முந்திய 18 மாத காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், நிதிக் குற்றங்களுக்காக ஆக அதிக தண்டத் தொகையை சிங்கப்பூர் நாணய ஆணையம் விதித்துள்ளது. அதோடு, ஆக அதிகமான நிதிக் குற்றங்களும் நிரூபணமாகின.

ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அதன் நான்காவது அமலாக்க அறிக்கையில், பங்குச் சந்தை முறைகேடு தொடர்பான வழக்குகளுக்காக கிட்டத்தட்ட $13 மில்லியன் தண்டத் தொகையை தான் விதித்ததாகக் கூறியது. இதுவரை பதிவாகியுள்ள ஆகப்பெரிய தொகை இதுவாகும்.

பங்குச் சந்தை தொடர்பான அத்துமீறல்களுக்காக அந்தத் தண்டத் தொகை விதிக்கப்பட்டது.

அந்த 18 மாதக் காலகட்டத்தில் மொத்தம் $7.9 மில்லியன் பெறுமானமுள்ள தொகை நீதிமன்ற வழக்கு இல்லாமல் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை உள்ளடக்கும்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதற்கு எதிரான விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட $7.1 மில்லியன் தொகையும் அதில் அடங்கும்.

ஆணையம் எடுத்த உயர் மட்ட நடவடிக்கையில், அனைத்துலக ‘வயர்கார்ட்’ மோசடியுடன் தொடர்புடையவர்களுடன் சம்பந்தப்பட்டதற்காக மூன்று வங்கிகளுக்கும் காப்புறுதி நிறுவனம் ஒன்றுக்கும் விதிக்கப்பட்ட $3.8 மில்லியன் அபராதமும் அடங்கும்.

அந்த மோசடியின் தொடர்பில், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதற்கு எதிரான விதிகளையும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதற்கு எதிரான விதிகளையும் மீறியதற்காக டிபிஎஸ் வங்கி, ஓசிபிசி வங்கி, சிட்டிபேங்க் சிங்கப்பூர், சுவிஸ் லைஃப் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கடந்த ஜூன் இறுதியில் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, நோபல் குழுமம் அதன் நிதிநிலை அறிக்கையில் தவறாக வழிநடத்தும் தகவலை வெளியிட்டதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அதற்கு $12.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடங்கிய ‘த்ரீ ஏரோஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தின் இரு இணை நிறுவனர்கள் ஒவ்வொருவருக்கும் தான் ஒன்பது ஆண்டுத் தடை விதித்ததாக கடந்த வாரம் ஆணையம் தெரிவித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!