சிண்டாவின் தீபாவளிப் பரிசு வழங்கும் ‘புரோஜெக்ட் கிவ் ஹார்ட்லேண்ட்’ திட்டம்

“படித்துக்கொண்டே பணியாற்றும் எனக்கு, குடும்பத்துடன் தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாட சிண்டாவின் தீபாவளிப் பரிசுகள் மிகவும் உதவியாக இருக்கும்,” என்கிறார் தனது இரு குழந்தைகளையும் தாயாரையும் ஒற்றை ஆளாகக் கவனித்து வரும் தெம்பனிஸ் பகுதியைச் சேர்ந்த நிவ்யா (44).

தீபாவளி, இந்தியர்கள் கொண்டாடும் ஒரு முக்கியப் பண்டிகை. சமூக வேறுபாடுகளின்றி அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டாடச் செய்யும் நோக்கில், சிண்டா ‘புரோஜெக்ட் கிவ் ஹார்ட்லேண்ட்’ எனும் நான்கு வட்டாரங்களில் வசதிகுறைந்தோருக்கு தீபாவளி பரிசு வழங்கும் திட்டத்தை இவ்வாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் அறிமுக விழா, அக்டோபர் 14 ஆம் தேதி, தெம்பனிஸ் கிழக்கு சமூக நடுவத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி பங்கேற்றார்.

அப்பகுதி மக்களோடு நேரம் செலவிட்ட அவர், “ சிங்கப்பூர் பல தடைகளையும், பொருளாதாரத் சிக்கல்களையும் சந்தித்துதான் முன்னேறி இருக்கிறது. நாம் முன்னேறி வந்ததோடு, யாரையும் விட்டுச்செல்லாமல், உடனிருப்பவர்களையும் அழைத்துச் செல்வது நம் கடமை. அதனை உறுதி செய்யும் விதமாக இவ்வகை விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி,” என்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்தின் மூலம் குறைந்த வருமான குடும்பங்களுக்கு பண்டிகைக் காலங்களில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. லிட்டில் இந்தியாவில் நிகழ்வுகள் நடத்தப்படுவதோடு, பெரும்பாலும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பரிசுகள் கொடுக்கும் வழக்கம் இருந்தது.

அத்திட்டத்தை மெருகேற்றி, இவ்வாண்டு தெம்பனிஸ் கிழக்கு, யூஹுவா, ஹெண்டர்சன், நீ சூன் குழுத்தொகுதி என நான்கு பகுதிகளில் உள்ள சமூக நிலையங்களில் விழாக்கள் நடத்தி, ஏறத்தாழ 1,200 குடும்பங்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளது சிண்டா.

இப்பரிசுப் பையில், ஏறத்தாழ 50 வெள்ளி மதிப்புள்ள இனிப்பு, பலகார வகைகள், அலங்காரப் பொருள்கள் மற்றும் $120 மதிப்புள்ள என்டியுசி பற்றுச்சீட்டும் இருக்கும்.

“பொதுவாக எங்கள் தீபாவளி, நண்பர்களைச் சந்திப்பது, குழந்தைகளுக்குப் பிடித்த பலகாரங்களை வாங்கித் தருவது என எளிமையாக இருக்கும். இவ்வாண்டு பரிசுப் பையில் இருக்கும் பலகாரங்களும், அலங்காரங்களும் எனது பதின்ம வயது பிள்ளைகளை மகிழ்ச்சிப்படுத்தும்,” என்றார் நிவ்யா.

முதற்கட்டமாக தெம்பனிஸ் கிழக்கில் 70 பேருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட மற்றொருவர் தாமரைச் செல்வி.

அவர் “நான் வேலைக்குச் செல்லாமல் இருந்த காலங்களில் இருந்தே சிண்டா எங்களுக்கு உதவி வருகிறது. தற்பொழுது இப்பரிசு கிட்டியிருப்பது மகிழ்ச்சி. மேலும், இவ்வகை விழாக்களில் நடத்தப்படும் பயிலரங்குகள் மூலம், குழந்தைகள் பாரம்பரிய பண்டிகை கொண்டாடும் முறையையும் அறிந்து கொள்வார்கள்,” என்றார்.

இந்நிகழ்விற்கு தொண்டூழியம் செய்தவர்கள், சமூகத்திற்குத் தங்களால் இயன்றதைச் செய்ய வாய்ப்பு கிடைத்தது பெருமை என்றனர்.

இதுகுறித்து பேசிய சிண்டாவின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன், “தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டின் வாசற்படிகளுக்கே கொண்டு செல்வது, அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகள் மக்களுக்காக நடத்தும் பல நிகழ்வுகளை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது, சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து தீபாவளியைக் கொண்டாடுவது ஆகிய குறிக்கோள்களுடன் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

இவ்விழா ஏறத்தாழ தீபாவளி பண்டிகையைப் போலவே களைகட்டியது. கோலம் போடும் பயிலரங்கு, முறுக்கு செய்யும் பயிலரங்கு, மருதாணி, குழந்தைகளுக்கு முகத்தில் ஓவியம் வரைவது எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மனிதவள அமைச்சு, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சுகாதார மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகளின் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இவ்விழா வசந்தம் தொலைக்காட்சிப் பிரபலங்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள், சிறு குழந்தைகளின் நடனங்கள், உணவு ஆகியவற்றோடு கோலாகலமாக நிறைவுற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!