வீவக மறுவிற்பனை வீட்டு விலை மட்டுப்படுகிறது

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை இவ்வாண்டின் 3வது காலாண்டில் மட்டுப்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவற்றின் விலை 1.3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் காலாண்டு சராசரி வளர்ச்சி 2.5 விழுக்காடாக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலை அவ்வளவு அதிகரிக்கவில்லை.

2020ன் இரண்டாவது காலாண்டிலிருந்து தொடர்ந்து 14வது காலாண்டாக விலை கூடியுள்ளது என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கழகத்தின் அறிக்கை தெரிவித்தது.

கடந்த காலாண்டின் 1.5 விழுக்காடு விலையேற்றத்துடன் ஒப்பிட்டால் மூன்றாவது காலாண்டில் 1.3 விழுக்காடு விலை கூடியுள்ளது.

“மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு விகிதத்தில் சில மாற்றங்களை காண முடிகிறது,” என்று வீவக அறிக்கை குறிப்பிட்டது.

அரசாங்கம் வீவக வீடுகளின் விநியோகத்தை வலுவாகவும் சீராகவும் வைத்துள்ளது. சொத்துச் சந்தை நிலையாக வைத்திருக்க சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தனியார் வீட்டு உரிமையாளர்கள், வீவக வீடு வாங்க வேண்டுமானால் 15 மாதங்கள் காத்திருக்க வேண்டும். 2022 செப்டம்பரில் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

மேலும், வீவக வீட்டுக் கடன்களுக்கான கடன்-மதிப்பு வரம்பு இரண்டு முறை கடுமையாக்கப்பட்டது. 2021 டிசம்பரில் 90 விழுகாட்டிலிருந்து 85 விழுக்காடாகவும் 2022 செப்டம்பரில் அது 80 விழுக்காட்டுக்கும் குறைக்கப்பட்டது. விவேகமான நிதி ஏற்பாட்டுடன் வீடுகளை வாங்குவதற்காக கடன் வரம்பு நடவடிக்கை புகுத்தப்பட்டுள்ளது.

‘ஆரஞ்சுடீ அண்ட் டை’ என்ற சொத்து நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வு பிரிவின் உதவி தலைவரான கிறிஸ்டின் சன், 2023ஆம் ஆண்டின் காலாண்டுகளில் மறுவிற்பனை சந்தையின் வளர்ச்சி இரண்டு விழுக்காட்டுக்கும் கீழ் குறிப்பிடும் அளவுக்குக் குறைந்தது என்றார்.

2022ல் ஒவ்வொரு காலண்டிலும் விலை உயர்வு வளர்ச்சி விகிதம் இரண்டு விழுக்காட்டுக்கு மேல் இருந்தது. 2021ல் 2.5 விழுக்காட்டுக்கு மேல் விலை கூடியது.

2023ன் 3வது காலாண்டில் மொத்தம் 6,695 வீடுகள் கைமாறின. இதற்கு முந்தைய காலாண்டில் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை 6,514. இதனுடன் ஒப்பிட்டால் தற்போது 2.8 விழுக்காடு கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.

ஆனால் 2022ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் கைமாறிய  7,546 வீடுகளுடன் ஒப்பிட்டால் இவ்வாண்டின் 3வது காலாண்டில் கைமாறிய வீடுகளின் விகிதம் 11.3 விழுக்காடு குறைந்துள்ளது.

இதற்கிடையே 2023ஆம் காலாண்டில் ஐந்து அறை, எக்சிகியூட்டிவ் வீடுகள் உட்பட குறைவான பெரிய வீடுகள் விற்கப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் பீஷானில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று அதிக விலைக்கு (S$929,000) விற்கப்பட்டுள்ளது.

2023ன் 3வது காலாண்டில் 128 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள வீடுகள் கைமாறியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!