புதுப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் வலுவாக உள்ளன: டான் சீ லெங்

பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றில் கல்வி கற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் வலுவாகவே உள்ளன என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

இதில், தேசிய சேவையை முடித்து வேலை தேடுவோருக்கான வேலைவாய்ப்புகள் உட்பட, குறிப்பிட்டுக் கூறும்படியான தரவுகள் இல்லை என்றபோதிலும், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வின்படி வேலைவாய்ப்புகள் வலுவாக இருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வின்படி, 2022ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு நாடிய பட்டதாரிகளில் 90 விழுக்காட்டினருக்கு ஆறு மாதங்களுக்குள் வேலை கிடைத்தது.

மேலும், 80 விழுக்காடு பட்டதாரிகளுக்கு நிரந்தர, முழுநேர வேலை கிடைத்தது. இந்த நிலை கொவிட் கொள்ளைநோய்க்கு முந்திய காலத்தில் இருந்த நிலைக்கு ஒப்பானது என்றும் அமைச்சர் டான் கூறினார்.

அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி நாடியா அகமது சாம்டின் கேட்ட கேள்விக்கு அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் டான், மீதமுள்ள 20 விழுக்காட்டினர், தங்கள் விருப்பப்படி பகுதிநேர, தற்காலிக அல்லது சொந்த விருப்புரிமையின் பேரில் வேலை பார்ப்பவர்களாக உள்ளனர் என்று அமைச்சர் விளக்கினார். இவர்களில் பெரும்பாலோர் மேற்கல்வி கற்கும் எண்ணத்தில் இவ்வாறு வேலை பார்க்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

புதிய பட்டதாரிகளிடையே மோசமான வர்த்தக வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர் டான், ஒட்டுமொத்த ஊழியர் சந்தை இறுக்கமாகவே உள்ளது என்று தெரிவித்தார். இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் வேலைக்கு ஆட்சேர்க்கும் போக்கு மட்டுப்பட்டுள்ளபோதிலும் இதுவே தற்போதைய நிலைமை என்று தெளிவுபடுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!