பெரும்பாலான வீடுகளுக்கு சொத்து வரி உயர்கிறது: சிரமத்தை ஈடுகட்ட அரசாங்கம் உதவிக்கரம்

பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களுக்கான சொத்து வரி அடுத்த ஆண்டு உயர்கிறது.

சொத்துச் சந்தையில் வாடகை அதிகரித்துள்ளதும் பெரும்பாலான குடியிருப்புச் சொத்துகளுக்கான வருடாந்திர மதிப்பு கூடியுள்ளதும் இந்த உயர்வுக்கான முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. வீடமைப்புக் கழக வீடுகளுடன் தனியார் சொத்துகளுக்கும் சொத்து வரி உயரும்.

இவற்றுடன், பெருமதிப்பிலான தனியார் வீடுகளுக்குரிய சொத்து வரி விகிதம் ஏற்றம் கண்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

வாழ்க்கைச் செலவினம் உயர்ந்து வரும் நிலையில் சொத்து வரியும் உயர்த்தப்படுவதால் அதனால் ஏற்படும் தாக்கத்தை ஈடுகட்ட அரசாங்கம் உதவிக்கரம் நீட்டுகிறது.

உரிமையாளர்கள் தங்கியிருக்கக்கூடிய எல்லா வீடுகளுக்கும் ஒருமுறைக்குரிய 100 விழுக்காடு வரையிலான சொத்துவரிக் கழிவை அரசாங்கம் வழங்கும் என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் வியாழக்கிழமை (நவம்பர் 30) கூட்டாக வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

உரிமையாளர் தங்கியிராத குடியிருப்புச் சொத்துகளையும் வருடாந்திர மதிப்பு $30,000க்கு மேற்பட்டு இருக்கும் வீடுகளையுமே சொத்து வரி உயர்வு பாதிக்கும்.

நவம்பர் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வரிக்கழிவுக்கேற்ப, உரிமையாளர் தங்கியிருக்கக்கூடிய ஓரறை மற்றும் ஈரறை வீவக வீடுகளின் வருடாந்திர மதிப்பு $8,000க்குக் கீழ் நீடிப்பதால், அத்தகைய வீடுகளுக்கு எப்போதும்போல 2024ஆம் ஆண்டிலும் சொத்து வரி செலுத்தத் தேவையில்லை.

உரிமையாளர் தங்கியுள்ள இதர வகை வீடுகளுக்கான வரிக்கழிவு, செலுத்தப்பட வேண்டிய சொத்து வரிக்கு ஈடாக தானாகப் பொருந்திவிடும்.

உதாரணமாக, உரிமையாளர் தங்கியிருக்கக்கூடிய ஓரறை மற்றும் ஈரறை வீடுகள் 100 விழுக்காடு கழிவைப் பெறும். அதேநேரம், முவறை வீடுகள் 70 விழுக்காடும் நான்கறை வீடுகள் 50 விழுக்காடும் கழிவைப் பெறும். எக்சகியூட்டிவ் வீடுகளுக்கான கழிவு 30 விழுக்காடாக இருக்கும். தனியார் சொத்துகளின் உரிமையாளர்கள் 15 விழுக்காட்டு கழிவைப் பெறுவர்.

மூவறை வீடுகள் முதல் எக்சகியூட்டிவ் வீடுகள் வரை $1.50 முதல் $6.30 வரை வரி உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு $3க்குக் குறைவாகவே சராசரி வரி உயர்வு இருக்கும்.

மூவறை வீடுகளுக்கான சராசரி சொத்து வரி உயர்வு, கழிவுக்குப் பின்னர், மாதத்திற்கு $1.50 ஆக இருக்கும். அந்த வீடுகள் செலுத்த வேண்டிய சராசரி சொத்து வரி, மாதத்திற்கு $4.10 ஆக உயரும்.

அதேபோல, நான்கறை வீடுகளுக்கு சராசரியாக $2.40 சொத்து வரி உயர்வும் அந்த வீட்டுக்குச் செலுத்தப்பட வேண்டிய சராசரி சொத்து வரி $12.80 ஆகவும் இருக்கும். கழிவு போக மாதாந்திர அடிப்படையிலான கணக்கு இது.

எவ்வளவு வரி வசூலிக்கப்பட வேண்டும் என்பதைக் கணக்கிட சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் ஆண்டுதோறும் சொத்துகளின் மறுஆய்வை மேற்கொள்ளும்.

அந்த மறுஆய்வின் ஒரு பகுதியாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் மற்றும் பெரும்பாலான தனியார் குடியிருப்புச் சொத்துகளின் வருடாந்திர மதிப்பு ஜனவரி 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் தெரிவித்து உள்ளன.

ஒரு சொத்தின் வருடாந்திர வாடகையே அதன் வருடாந்திர மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது. மேலும், சந்தையில் அதேபோன்ற சொத்துக்கு நிலவும் வாடகை விகிதத்தின் அடிப்படை மற்றும் இதர காரணிகளின் அடிப்படையிலும் வருடாந்திர மதிப்பு அமையும்.

சொத்து வரியைத் தீர்மானிக்க சொத்தின் வருடாந்திர மதிப்பு கணக்கிடப்படுகிறது. வருடாந்திர மதிப்பு இதற்கு முன்னர் 2023 ஜனவரி 1ல் திருத்தப்பட்டது.

இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட சொத்து வரி உயர்வு ஜனவரி 1 முதல் நடப்புக்கு வரும் என்று 2022 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பெருமதிப்பிலான சொத்துகளே அதிக வரி உயர்வைச் சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!