எட்டு இடங்களில் புதிய வீவக வீடுகள்

6,057 பிடிஓ வீடுகள் விற்பனை

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், டிசம்பர் 5ஆம் தேதி 6,057 புதிய பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விட்டது.

அந்த வீடுகள் பிடோக், பீஷான், புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் வெஸ்ட், குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் கட்டப்படுகின்றன.

புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் ஆகிய இரு குடியிருப்புத் திட்டங்களில் வீடு வாங்குவோருக்கு வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்படும் என்று கழகம் அறிவித்துள்ளது.

இந்த இரு வீடமைப்புத் திட்டங்களிலும் முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின்கீழ் (பிஎல்எச்) வீடுகள் கட்டப்படுகின்றன. கூடுதல் மானியம் பற்றி கழகம் விவரிக்கவில்லை. இருந்தாலும் மறுவிற்பனை சந்தையில் அதிகரித்துள்ள வீட்டு விலைக்கு ஈடாக மானியம் வழங்கப்படுவதாக கழக அறிக்கை குறிப்பிட்டது.

முதன்மை வட்டார வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை விற்கும்போது வீட்டின் மதிப்பீடு அல்லது மறுவிற்பனை விலை ஆகியவற்றில் எது அதிகமோ அதில் எட்டு விழுக்காட்டை திருப்பிச் செலுத்த வேண்டும். இது, முந்தைய முதன்மை வட்டார வீட்டுத் திட்டங்களில் ஆறு விழுக்காடாக இருந்தது.

இந்தத் திட்டங்களுக்கான குறைந்தபட்ச தங்கும் காலம் பத்து ஆண்டுகளாக இருக்கும்.

புக்கிட் மேராவில் அலெக்சாண்ட்ரா பீக்ஸ், குவீன்ஸ்டவுனில் உலு பாண்டான் விஸ்டா ஆகியவை பிஎல்எச் கட்டுமானத் திட்டங்களாகும்.

பிஎல்எச் வீடுகளில் இருபது விழுக்காடு, முதல் முறையாக வீடு வாங்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் என்று கழகம் கூறியது.

திருமணமான பிள்ளைகளின் முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் இரண்டாவது முறையாக வீடு வாங்கும் குடும்பங்களுக்கு இரண்டு விழுக்காடு வீடுகள் இதில் ஒதுக்கப்படும். திருமணமான பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆதரவுடன் நெருக்கமாக வசிக்க இது வழி வகுக்கிறது.

இந்த விற்பனையின் நான்கு திட்டங்களில் கட்டப்படும் வீடுகள் அல்லது விற்பனைக்கு விடப்பட்டுள்ள வீடுகளில் பாதி வீடுகளுக்கான காத்திருப்பு காலம் நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று கழகம் மேலும் தெரிவித்தது.

உதாரணமாக, பீஷானில் உள்ள சின் மிங்கில் கட்டப்படும் 732 மூவறை, நான்கறை வீடுகளுக்கான காத்திருப்பு காலம் இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்களாக இருக்கும்.

அலெக்சாண்டிரா ரோடு மற்றும் அலெக்சாண்டிரா கனேல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட புக்கிட் மேராவின் அலெக்சாண்டிரா பீக்ஸ் பிஎல்எச் திட்டத்தின்கீழ் 904 ஈரறை ஃபிளக்சி, மூவறை, நான்கறை வீடுகள் கட்டப்படுகின்றன. இது, குறிப்பிடும்படியாக ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே அமைகிறது.

மூவறை வீடுகளின் விலை $380,000 முதல் $512,000 (மானியம் இல்லாமல்) வரையிலும் நான்கறை வீடுகளின் விலை $533,000 முதல் $723,000 வரையிலும் இருக்கும்.

இந்த விற்பனையின் இரண்டாவது பிஎல்எச் திட்டமான குவீன்ஸ்டவுனில் உள்ள உலு பாண்டான் விஸ்டா வீட்டுத் திட்டத்தில் 890 மூவறை மற்றும் நான்கறை வீடுகள் கட்டப்படும். இது, டோவர் எம்ஆர்டிக்கு அருகே அமைகிறது.

இதன் மூவறை வீடுகளின் விலை $430,000 முதல் $541,000 (மானியம் இல்லாமல்) வரையிலும் நான்கறை வீடுகள் $598,000 முதல் $763,000 வரையிலும் இருக்கும். இந்த விற்பனையில் இவை ஆக அதிக விலையுள்ள வீடுகளாகும்.

இந்த விற்பனையில் வெளியிடப்பட்ட வீடுகளை வாங்குவோர் வீவக இணையத்தளத்தின் வழியாக டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11.59க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

டிசம்பரில் விற்கப்படும் வீடுகளையும் சேர்த்து 2023ல் மொத்தம் பிடிஓ வீடுகளின் எண்ணிக்கை 22,780க்கு அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பிடோக், குவீன்ஸ்டவுன், சுவா சூ காங், ஹவ்காங், பொங்கோல், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் கட்டப்படும் 4,100 வீடுகளை வீவக விற்பனைக்கு வெளியிடவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!