2024ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி குறையும் என நிபுணர்கள் கணிப்பு

உலகளாவிய பொருளியல் மெதுவடையும் ஆபத்தான சூழ்நிலையில் ஏற்றுமதிகளை சார்ந்துள்ள சிங்கப்பூரின் 2024ஆம் ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி, எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குடியரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2024ல் 2.3 விழுக்காடாக இருக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது, முந்தைய 2.5 விழுக்காடு வளர்ச்சியைவிட குறைவு.

சிங்கப்பூர் நாணய ஆணையம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் பொருளியல் நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியை மதிப்பிட்டுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற 25 பொருளியல் நிபுணர்களில் 81 விழுக்காட்டினர், வெளிநாடுகளில் பொருளியல் மெதுவடைந்தால், அது சிங்கப்பூரின் வளர்ச்சியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி உள்ளனர்.

வட்டார அரசியல் பதற்றம், பணவீக்க அழுத்தம், சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளியான சீனாவின் பலவீனமான பொருளியல் வளர்ச்சி ஆகியவை சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 விழுக்காட்டினர், வெளிநாட்டு வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்தால் சிங்கப்பூரின் பொருளியல் 2024ல் மேம்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதே சமயத்தில் சிங்கப்பூரின் மின்னியல் பொருள் ஏற்றுமதி மற்றும் சீனாவின் வலுவான வளர்ச்சி ஆகியவை 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் காரணிகளாக இருக்கும் என்று சில நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

கடந்த நவம்பரில் வர்த்தக, தொழில் அமைச்சு சிங்கப்பூரின் பொருளியல் முன்னுரைப்பை வெளியிட்டிருந்தது. வர்த்தகம் தொடர்பான துறை ஒரளவு மேம்பட்டால் 2024ஆம் ஆண்டுக்கான அந்த வளர்ச்சி, ஒரு விழுக்காட்டுக்கும் மூன்று விழுக்காட்டுக்கும் இடையே இருக்கும் என்று அது கணித்திருந்தது.

ஆயினும், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் எதிர்பார்த்ததைவிட மெதுவடையும் சீனாவின் பொருளியல், அடுத்த ஆண்டின் ஒட்டுமொத்த உலகளாவிய வளர்ச்சியை மந்தமாக வைத்திருக்கும் அபாயத்தை அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கிடையே டிபிஎஸ் வங்கியின் பொருளியல் நிபுணரான சுவா ஹான் டெங், 2023ஆம் ஆண்டைவிட 2024ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2 விழுக்காடாக இருக்கும் என்று ஆய்வு கணித்துள்ளதை தாமும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த அவர், “சிங்கப்பூரின் வளர்ச்சி அதிகரிக்கும்,” என்றார்.

ஆனால் உற்பத்தித் துறை, ஒட்டுமொத்த வர்த்தகம், நிதி சேவைகள் உள்ளிட்ட வெளிநாடு சார்ந்த துறைகளின் செயல்திறனைப் பொருத்து சிங்கப்பூரின் வளர்ச்சி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!