ஏராளமானோர் பதிவிறக்கம் செய்ததால் தடுமாறிய ‘சிம்ப்ளிகோ’ செயலி

வரும் ஜூன் மாதத்திலிருந்து பழைய கட்டண அட்டைகளுக்கு மாற்றாக ‘சிம்ப்ளிகோ’ செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏராளமானோர் அச்செயலியைப் பதிவிறக்கம் செய்ததால் அதில் உள்ள சில அம்சங்களை சிலரால் பயன்படுத்த முடியவில்லை.

ஜனவரி 10ஆம் தேதி மாலை மேம்படுத்தப்பட்ட ‘சிம்ப்ளிகோ’ செயலி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ‘ஆப்ஸ்டோர்’ தளங்களில் வைக்கப்பட்டிருந்தது.

ஏராளமனோர் பதிவிறக்கம் செய்யத் தொடங்கினர். அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் செயலி தடுமாறியது.

இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு, அதிகமானோர் பதிவிறக்கம் செய்ததன் விளைவாக அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டது என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

“இப்பிரச்சினையைக் களைய டிரான்சிட்லிங்க் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட செயலியை தற்போது பயனீட்டாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம்,” என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

“சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்,” என்றார் அந்தப் பேச்சாளர்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் துணை நிறுவனமான டிரான்சிட்லிங்க் ‘சிம்ப்ளிகோ’ செயலியை உருவாக்கியிருந்தது.

ஜூன் மாதத்திலிருந்து ‘சிம்ப்ளிகோ’ செயலி அல்லது ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே கார்ட்’ ஆகியவற்றுக்கு ஏற்புடையதற்ற பழைய ஈஸிலிங்க் அட்டைகளை பொதுப் பேருந்து அல்லது ரயில்களில் கட்டணம் செலுத்தப் பயன்படுத்த முடியாது.

இதற்காக ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பயனீட்டாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் பழைய ஈஸிலிங்க் அட்டைகளை ‘சிம்ப்ளிகோ’ நுழைவுச் சீட்டு அலுவலகங்கள், நுழைவுச் சீட்டு சேவை நிலையங்கள், ரயில் மற்றும் பேருந்து சந்திப்பு நிலையங்களில் உள்ள நுழைவுச் சீட்டு இயந்திரங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்று ஜனவரி 9ஆம் தேதி நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது.

அடுத்த நாளே ‘சிம்ப்ளிகோ’ செயலியில் புதிய கணக்கு தொடங்குவதிலும் மறைச்சொல்லை மாற்றுவதிலும் பிரச்சினை இருந்ததாக பயனீட்டாளர்கள் ‘சிம்ப்ளிகோ’ இணையப் பக்கத்தில் புகாரளித்திருந்தனர்.

ஜனவரி 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்குள் 100க்கும் மேற்பட்டோர் தங்களுடைய பிரச்சினைகளைப் பதிவிட்டிருந்தனர்.

சிம்ப்ளிகோ செயலி, கட்டண அட்டையில் தொகையைச் சேர்க்கவும் அதில் உள்ள கட்டணம், எஞ்சிய தொகை பற்றிய அறிவிப்புகளைப் பெறவும் உதவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!