3,000 நிறுவனங்களின் உருமாற்றத்துக்குக் கைகொடுத்த என்டர்பிரைஸ்எஸ்ஜி

சென்ற ஆண்டு உலகளாவிய நிலையில் பொருளியல் இடையூறுகளால் வர்த்தக நிலைமை பாதிக்கப்பட்டபோதும், ஏறத்தாழ 3,000 சிங்கப்பூர் நிறுவனங்களின் உருமாற்றத்திற்கு என்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் கைகொடுத்துள்ளது.

அந்த நிறுவனங்கள் உற்பத்தி, புத்தாக்கம், அனைத்துலகமயமாதல் ஆகிய அம்சங்கள் தொடர்பான திறன்களை மேம்படுத்திக்கொள்ள அது உதவியது.

இந்தத் திட்டங்கள், என்டர்பிரைஸ்எஸ்ஜியின் ஆண்டு வருவாயை $16.4 பில்லியன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவற்றின் மூலம் 21,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென எதிர்பார்ப்பதாக வியாழக்கிழமை (ஜனவரி 25) அவ்வமைப்பு தெரிவித்தது.

என்டர்பிரைஸ்எஸ்ஜி, தனது வருவாய் தொடர்பான புள்ளிவிவரங்களை முன்னுரைப்பது இதுவே முதல்முறை.

2023ஆம் ஆண்டு உலகப் பொருளியல் மந்தநிலை, வட்டிவிகித உயர்வு, அதிகரிக்கும் தொழில்சார் செலவினம் ஆகியவற்றால் நிறுவனங்கள் பொருளியல் சவால்களை எதிர்கொண்டதாக என்டர்பிரைஸ்எஸ்ஜியின் தலைமை நிர்வாகி லீ சுவான் டெக் கூறினார்.

இருப்பினும், சிங்கப்பூர் நிறுவனங்கள் பல, புதிய வாய்ப்புகளைத் தேடி வெளிநாடுகளில் கால் பதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நிறுவனங்கள், 460 வெளிநாட்டுத் திட்டங்கள் மூலம் புதிய சந்தைகளில் வர்த்தகம் செய்ய என்டர்பிரைஸ்எஸ்ஜி ஆதரவளித்தது. இத்திட்டங்கள் மூலம் அந்த நிறுவனங்களின் ஆண்டு வருவாய் $5.2 பில்லியன் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கெனவே வெளிநாடுகளில் தொழில் செய்பவை என்று கூறிய திரு லீ, புதிய நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளை அணுகுவதை ஊக்கப்படுத்தவும் ஏற்கெனவே வெளிநாட்டில் தொழில் செய்யும் நிறுவனங்கள் மேலும் புதிய சந்தைகளில் விரிவாக்கம் காண ஊக்குவிக்கவும் என்டர்பிரைஸ்எஸ்ஜி திட்டமிடுவதாகக் கூறினார்.

சீன, தென்கிழக்காசியச் சந்தைகள், வெளிநாடுகளில் விரிவாக்கம் காண விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களின் முன்னணித் தெரிவுகளாக உள்ளன. சில்லறை விற்பனையைப் பொறுத்தவரை, அமெரிக்கச் சந்தை அதிகம் ஈர்க்கிறது.

இருப்பினும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற வளரும் பொருளியல்களின் சந்தைகளிலும் வாய்ப்புகள் இருப்பதாக என்டர்பிரைஸ்எஸ்ஜி அடையாளம் கண்டுள்ளது.

இதற்கிடையே, திறன் மேம்பாடு, சந்தை ஆய்வுத் திட்டங்கள் தொடர்பில் ஏறக்குறைய 15,000 நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதாக என்டர்பிரைஸ்எஸ்ஜி தெரிவித்தது.

அவற்றில் 85 விழுக்காட்டிற்கு மேலான நிறுவனங்கள் மின்னிலக்கத் தீர்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. எஞ்சியவை வெளிநாட்டு வர்த்தகக் கண்காட்சிகளில் கலந்துகொண்டு புதிய சந்தை வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டன.

இந்த ஆண்டு, பொருளியல் இடையூறுகள் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வர்த்தக, முதலீட்டுக் கட்டுப்பாடுகளால் ஏற்படும் நீண்டகாலச் சவால்கள் நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

இருந்தாலும், மூன்று முன்னுரிமைகளில் கவனம் செலுத்த என்டர்பிரைஸ்எஸ்ஜி திட்டமிடுகிறது.

புத்தாக்கம், உற்பத்தி, அனைத்துலகமயமாதல் உத்திகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தல், சிங்கப்பூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் துறைசார் வளர்ச்சி, மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவையே அந்த முன்னுரிமைகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!