ஈசூன் புளோக்கில் மின்சாரத் தீச் சம்பவங்களால் 17 மணிநேர மின்வெட்டு

ஈசூனில் உள்ள புளோக் ஒன்றில் மூன்று மாடிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அன்று ஏற்பட்ட மின்சாரத் தீச் சம்பவங்களால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் மின்சார விநியோகம் 17 மணிநேரத்துக்கு தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈசூன் அவென்யூ 11 புளோக் 443ல் தீ ஏற்பட்டதாக தங்களுக்கு வியாழக்கிழமை இரவு பின்நேரம் 12.45 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.

அந்த புளோக்கின் 7, 8, 9வது மாடிகளில் உள்ள மின்சார மீட்டர்கள் தீப்பிடித்ததாக அறியப்படுகிறது. தீயணைப்பு அதிகாரிகள் வருவதற்கு முன் ஏழாம், ஒன்பதாம் மாடிகளில் ஏற்பட்ட தீ அணைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீதமிருந்த தீயும் காய்ந்த பொடி தூவும் கருவி கொண்டு அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

இது குறித்து கருத்துரைத்த நீ சூன் நகரமன்ற பேச்சாளர் ஒருவர், பொறியாளர் ஒருவர், எஸ்பி பயனீட்டுக் குழுமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஆகியோர் மின் விநியோகத்தை மீண்டும் செயல்படுத்த பணியாற்றி வருவதாகக் கூறினார்.

வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி நேரப்படி இறுதிக்கட்ட சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த மின்வெட்டு ஒவ்வொரு மாடியிலும் உள்ள சில வீடுகளைப் பாதித்திருப்பதாக அந்தப் பேச்சாளர் விளக்கினார்.

அந்த புளோக்கின் நான்காம் மாடியில் வசிக்கும் ஒருவர், மின்வெட்டால் தம்மால் வேலை செய்ய முடியவில்லை என்று கூறியதாக ஷின் மின் செய்தித்தாள், தனது வாசகர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார் என்று தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!