கதைக்களத்தில் எழுத்தாளர் அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி பிப்ரவரி 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.

எழுத்தாளர் அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் பல்வேறு கதைக் கருக்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை மனித மனங்களின் பல்வேறு உணர்வுகளை எடுத்தியம்பும் வகையில் அமைந்துள்ளன. படிக்கும் வாசகரின் மனத்தில் தாக்கத்தை ஏற்படும் வகையில் சொல்லப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பின் கலந்துரையாடல் அங்கமும் இடம்பெற இருக்கிறது.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வி இராஜராஜன் நூலின் சிறப்புகளைக் கதைக்கள வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியருடன் இடம்பெறும் கலந்துரையாடல் அங்கத்தில் திருவாட்டி கங்கா, திருவாட்டி சபரிஸ்ரீ இருவரும் பங்கேற்று கலந்துரையாட இருக்கின்றனர். அத்துடன் 2023ஆம் ஆண்டு தங்கமுனை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு செய்யப்படும்.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன. மாணவர் ராமசுப்ரமணி சஞ்சீவ் பங்கேற்று, நெறிப்படுத்தும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

அடுத்த மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

மூன்று பிரிவுகளாக நடைபெறும் பிப்ரவரி மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும். “தனக்குள் புதைந்திருந்த மாபெரும் கலையை அவள்/அவன் உணர்ந்ததாகவே தெரியவில்லை”

இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும். “கதை எழுத வேண்டும் என்று நினைத்தவுடன், நேற்று மாலை நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது”

பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும். “தலையணைக்கு அடியில் துழாவி ஒரு காகிதச் சுருளை எடுத்தார்”

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 03/03/2024 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும். மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ அல்லது பிரதீபா வீரபாண்டியன் - 81420220/ பிரேமா மகாலிங்கம் - 91696996

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!