‘2024ல் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் மீளும்’

சென்ற ஆண்டு சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 13.1 விழுக்காடு குறைந்தன.

உலகளவில் மின்னியல் பொருள்கள், பெட்ரோலிய ரசாயனம் ஆகியவற்றுக்கான தேவை குறைந்தது அதற்குக் காரணம். மின்சாரப் பொருள்கள், பெட்ரோல் ரசாயனம் ஆகியவை சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகளில் அடங்கும்.

எனினும், இவ்வாண்டு நிலைமை மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கான எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் நான்கிலிருந்து ஆறு விழுக்காடு வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி இரண்டிலிருந்து நான்கு விழுக்காட்டுக்குள் பதிவாகும் என்று முன்னதாகக் கணிக்கப்பட்டிருந்தது.

உலகளவில் மின்சாரப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

என்டர்பிரைஸ்எஸ்ஜி அமைப்பு இந்த விவரங்களை வெளியிட்டது. சென்ற ஆண்டுக்கான வர்த்தகச் செயல்திறன் அறிக்கையை ஆராயும்போது இவ்வாண்டுக்கான வளர்ச்சி விகிதம் முதலில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்று அந்த அமைப்பு முன்னுரைத்தது.

சென்ற ஆண்டுக்கான எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 12லிருந்து 12.5 விழுக்காடு சுருங்கும் என்று கடந்த நவம்பர் மாதம் கணிக்கப்பட்டிருந்தது. இறுதியில் பதிவான 13.1 விழுக்காடு அதைவிட அதிகமாகும்.

2022ல் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் மூன்று விழுக்காடு வளர்ச்சி கண்டன.

2023ல் எண்ணெய் சாரா மின்னியல் பொருள்களின் ஏற்றுமதி 19.7 விழுக்காடு சரிந்தது. பெட்ரோலிய ரசாயன ஏற்றுமதிகள் 20.1 விழுக்காடு சரிந்தன.

எனினும், உலகப் பொருளியல் இவ்வாண்டு நன்கு மீண்டுவரும் என்று அனைத்துலகப் பண நிதியம் போன்ற அமைப்புகள் கணித்துள்ளன. அது, சிங்கப்பூரின் ஏற்றுமதிகள் மீண்டுவரவும் உதவும் என்று என்டர்பிரைஸ்எஸ்ஜி குறிப்பிட்டது.

இவ்வாண்டு உலகப் பொருளியல் நடவடிக்கைகள் 3.1 விழுக்காடு அதிகரிக்கும் என்று அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்தது. முன்னதாக அந்த விகிதம் 2.9 விழுக்காடாகக் கணிக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!