விலங்கியல் தோட்ட இயக்குநருக்கு $1.8 மில்லியன் லஞ்சம் கொடுக்க முயன்ற ஆடவருக்குச் சிறை

கட்டுமான நிறுவனமான ‘ஷின் யோங் கன்ஸ்ட்ரக்‌ஷனில்’ திட்ட மேலாளராகப் பணிபுரிந்த டோ யோங் சூன், சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட இயக்குநருக்கு $1.8 மில்லியனுக்கும் மேலான தொகையை லஞ்சமாக கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அந்தக் குற்றத்திற்காக 39 வயதான டோக்கும் மூன்று ஆண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை ( மே 3ஆம் தேதி) விதிக்கப்பட்டது.

தன்மீது சுமத்தப்பட்ட 12 ஊழல் குற்றச்சாட்டுகளை டோ நீதிமன்றத்தில் ஒப்புகொண்டார். தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற 47 குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.

இக்குற்றத்தை 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் டோ புரிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

டோ, வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் ஒப்பந்தங்களைப் பெற அத்தோட்டத்தின் இயக்குநராக இருந்த 57 வயது, பேரி சோங் பங் வீக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுக்கக் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

பேரி சோங் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!