பள்ளி கைச்செலவு நிதிக்கு வில்மார் நிறுவனம் $6 மில்லியன் நன்கொடை

வில்மார் இன்டர்நே‌ஷனல் நிறுவனமும் அதன் தலைவரும் தலைமை நிர்வாகியுமான குவோக் கூன் ஹோங்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதிக்கு மொத்தம் $6 மில்லியன் நன்கொடை வழங்குகின்றனர். 

வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனமும் திரு குவோக்கும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்குத் தலா ஒரு மில்லியன் வெள்ளி வழங்குவர். 

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, உயர்நிலைக்குப் பிந்திய கல்விக்கழக மாணவர்களுக்குக் கைச்செலவுக்கு பணம் கொடுப்பதற்கு இந்த நன்கொடை பயன்படும். 

2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதிக்கு வில்மார் நிறுவனமும் திரு குவோக்கும் 2020 முதல் 2022 வரை மொத்தம் $7 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளனர். 

“இந்த நிதியின்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 10,000 மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறோம். அந்த மாணவர்களின் சார்பில் திரு குவோக்குக்கும் வில்மாருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று நிதியின் தலைவரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஆசிரியருமான திரு ஜேமி ஹோ குறிப்பிட்டார். 

1991ல் தொடங்கப்பட்ட வில்மார் நிறுவனம், சிங்கப்பூரிலுள்ள பல்வேறு கல்விக் கழகங்களுடன் கூட்டிணைந்து, கல்வித்திறன்மிக்க மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமும் கல்வி உதவி நிதியும் வழங்கி வருகிறது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!