அழகைத் தேடும் பயணம் முடிவில்லாதது

தோற்றப் பொலிவுக்கு, வெளிர்நிறம், உடலின் முடியை நீக்குவது போன்றவை முக்கியம் என்ற கருத்தைத் திரைப்படங்கள், விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் எனப் பல்வேறு தளங்கள் காட்டுகின்றன. குறிப்பாக உடலில் அதிகமான முடி தோற்ற அழகை கெடுக்கிறது என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. இதனால் உடல் முடியை நீக்கும் அழகுப் பராமரிப்புச் சேவைகள் அத்தியாவசிய தேவையாகிவிட்டன. இது குறித்து தமிழ் முரசு ஆராய்ந்து வந்தது.

மஞ்­சள் பூசி­யது முதல் இன்­றைய அழ­கு சிகிச்சை வரை முகத்­திலும் உட­லி­லும் உள்ள முடியை அகற்­றுவது காலந்­தோ­றும் பெண்­க­ளின் அழ­குப் பரா­ம­ரிப்­பில் முக்­கிய அங்­க­மாக இருந்துவந்­துள்­ளது. இன்று ஆண்­களும் இத்­த­கைய சேவை­யை நாடி வரு­கின்­ற­னர்.

முடி நீக்­கும் சேவையை ஆண்­கள் பயன்படுத்­தத் தயங்­கத் தேவை­யில்லை என்று பொறி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் 28 வயது ஹரி ராகுல் கூறுகிறார். தாடி மீசை மழித்­து­வ­ரும் இவர், முடி அகற்­று­வ­தற்­கான புதிய சேவை­க­ளைப் பற்றி தெரிந்­து­கொண்டு பயன்­ப­டுத்­து­வ­தில் ஆர்­வம் காட்டி ­வ­ரு­கி­றார்.

பெண்­கள் பெரும்­பா­லும் முட்டி வரை ஆடை­க­ளை­யும் மொட்­டைக் கை சட்­டை­க­ளை­யும் அணிய கால்­களில் வள­ரும் முடி­யில் தொடங்கி, தற்­போது கைகள், முகம், அக்­குள் போன்ற பிற இடங்­க­ளி­லும் முடி வளர்­வ­தைத் தடுக்க விரும்­பு­கின்­ற­னர்.

அதே நேரம் புகழ்­பெற்ற பாலி­வுட் நடிகை கரீனா கபூர் அண்­மைய நேர்­கா­ண­லில், உட­லில் வள­ரும் முடிக்கு அதிக முக்­கி­யத்­து­வம் தரு­வ­தில்லை என்­றார்.

புரு­வத்­தில் உதட்­டுக்கு மேல் முடி வளர்ந்­தால் அதைப் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை என்ற கரீனா. அது இயற்கை என்று கூறி­னார். உட­லில் இருக்­கும் முடி பார்க்க சகிக்­கா­தது என்ற எண்­ணத்தை உடைக்­கும் முயற்­சி­யாக இந்­திய நடிகை திலோத்­தமா ஷோமே இரு கைக­ளை­யும் மேலே தூக்­கி­ய­படி அக்­கு­ளில் வளர்ந்­துள்ள முடி­யைக் காண்­பிக்­கும் புகைப்­ப­டத்தை பதி­வேற்­றம் செய்­தி­ருந்­தார்.

ஆனால் அதே சமூக ஊட­கங்­களில் பிர­ப­லங்­கள் தோல் வெளுப்­பா­க­வும் மிரு­து­வா­க­வும் இருக்­கும் புகைப்­ப­டங்­க­ளைப் பதி­வேற்­றும்­போது அதுவே சுண்டி இழுக்­கும் அழகு என்ற எண்­ணம் மீண்­டும் பதிய வைக்­கப்­ப­டு­கிறது.

முடி நீக்க பல்­வேறு வழி­கள்

மழிப்­ப­தைத் தவிர்த்து கை கால் முகத்­தில் உள்ள முடியை நீக்க இப்­பொ­ழுது பல வழி­கள் வந்­துள்­ளன.

மெழுகை மூலப்­பொ­ரு­ளா­கக் கொண்ட பசை­யில் தேன் உள்­ளிட்ட இயற்கை மூலப்­பொ­ரு­ளைக் கலந்து, உட­லில் இருக்­கும் முடியை அகற்ற ‘வேக்­சிங்’ முறை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. ‘வேக்­சிங்’ செய்­தால் மாதம் ஒரு­முறை மட்­டும் முடி அகற்­றி­னால் போதும் என்­ப­தால் மழிப்­ப­தற்­குப் பதில் பலர் இதை நாடு­கி­றார்­கள்.

கடந்த 40 ஆண்­டு­க­ளுக்கு மேலாக அழ­குப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் உள்ள ‘லேடி ஃபேர்’ அழகு நிலை­யத்­தின் நிறு­வ­ரான பாமா சுதர்­மன், முடி அகற்­றும் வழி­களில் ‘வேக்­சிங்’ சிறந்­தது என்­றார். தம்­மு­டைய பெண் வாடிக்­கை­யா­ளர்­கள் முன்­ன­தாக தங்­கள் வச­திக்கு ஏற்ப உடல் முடியை மழித்­த­தால் அவர்­க­ளின் முடி மிக தடி­ன­மாக வளர்ந்­தது என்று பாமா குறிப்­பிட்­டார்.

மேலும், ‘வேக்­சிங்’ செய்­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் பசை, இயற்கை மூலப்­பொ­ருள்­க­ளால் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தால் அது சரு­மத்­திற்கு எவ்­வி­தப் பக்­க­வி­ளை­வும் ஏற்­ப­டுத்­தாது என்­றார் பாமா.

‘வேக்­சிங்’ செய்­வ­தால் முடி வளர்­வது மெது­வ­டை­யும் என்­றார் ‘நைஸ்’ அழகு, முடி பரா­ம­ரிப்பு நிலை­யத்­தின் நிறு­வ­னர் திரு கார்த்­திக். ஒவ்­வோர் உடல் அங்­கத்­திற்­கும் வெவ்­வேறு பசை­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தற்­போது ‘ஷுக­ரிங்’ எனும் சேவை­யும் உள்­ள­தென்று கூறிய கார்த்­திக், இதற்கு பயன்­ப­டுத்­தப்­படும் பசை, முழுக்க முழுக்க இயற்கை மூலப்­பொ­ருள்­க­ளால் செய்­யப்­பட்­டது என்­றார். முடியை அகற்­றும் அதே வேளை­யில் ‘ஷுக­ரிங்’ மூலம் தோலில் தேவைப்­ப­டாத அணுக்­கள் அகற்­றப்­பட்டு, சரு­மம் புதுப் பொலிவு பெறு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முடி சரி­யாக வள­ரா­மல் தோலுக்­குள் சுருண்­டு­கொள்­ளும் பிரச்­சினை, இந்­தி­யப் பெண்­க­ளி­டையே அதி­கம் காணப்­படும் நிலை­யில் ‘ஷுக­ரிங்’ முறை இதற்­கும் தீர்வு காணும் என்­றார் கார்த்­திக். இதை­யும் தாண்டி, அறவே முடி வள­ரக்­கூ­டாது என்­ப­தற்­காக, பலர் ‘ஐபி­எல்’, ‘லேசர்’ முறை­களில் முடி அகற்­று­வ­தில் ஆர்­வம் காட்­டி­வ­ரு­கின்­ற­னர்.

‘லேசர்’ முறை­யில் முடியை நீக்க முடிவு செய்­துள்ள காஞ்­சனா மனோ­க­ரன், 24, முடியை மழித்து வந்­த­தால் உட­லில் மிருது­வற்ற முடி வளர்ந்­த­தா­க­வும் அது வலி உண்­டாக்­கி­ய­தா­க­வும் கூறி­னார். வலி­யின்றி தமது சரு­மத்தை மென்­மை­யாக்­கும் விதத்­தில் லேசர் இருக்­க­லாம் என்­ப­தால் அந்த முறையை அடுத்து நாட காஞ்­சனா விரும்­பு­கி­றார்.

காஞ்­ச­னா­வைப் போலவே, 22 வயது சீனி­வா­சன் ஸாந்­தினி ‘லேசர்’ செய்ய விரும்­பு­கி­றார். இது­வரை ‘வேக்­சிங்’ செய்­துள்ள இவர், வலி ஏற்­ப­டா­மல் இருப்­ப­தற்­கும் முடி வளர்­வ­தைக் குறைப்­ப­தற்­கும் ‘லேசர்’ செய்ய முடி­வெ­டுத்­துள்­ளார்.

துன்பம் தந்த அனுபவம்

இதற்­கி­டையே ‘லேசர்’ முறை­யி­லி­ருந்து சற்று வேறு­பட்ட ‘ஐபி­எல்’ முடி அகற்­றும் முறை தமக்­குத் தந்த துன்­பத்தை கிருஷ்­ண­வேணி பக்கிரி­சாமி விவ­ரித்­தார்.

அழகு நிலை­யம் ஒன்­றில் தள்­ளு­படி வழங்­கப்­பட்­ட­தால் கிருஷ்­ண­வேணி இந்த முறை­யைப் பயன்­ப­டுத்­திப் பார்க்­க­லாம் என்று நினைத்­தார். ஒரே ஒரு முறை செய்துபார்த்­ததை அடுத்து தோலில் கருந்­திட்­டு­கள், வீக்­கம், தோல் உரி­வது போன்ற பிரச்­சி­னை­கள் அவ­ருக்கு ஏற்­பட்­டன.

‘எக்­ஸீமா’ எனும் அரிக்­கும் தோல­ழற்சி பிரச்­சினை உள்ள இவ­ருக்கு, இப்­பக்­க­வி­ளை­வு­கள் கூடு­தல் பாதிப்பை ஏற்­ப­டுத்­தின.

முடி வளர்ந்­தா­லும் பர­வா­யில்லை, ‘ஐபி­எல்’, ‘லேசர்’ போன்ற சேவை­கள் இனி வேண்­டாம் என முடி­வெ­டுத்த இவர், பாது­காப்­பான முறை­யில் ரசா­ய­னக் கலப்­பில்­லாத ‘ வேக்­சிங்’ முறை­யைப் பயன்­ப­டுத்­தி வருகிறார். அவ­ரு­டைய தோல் பழைய நிலைக்­குத் திரும்­பி­விட்­டது.

20 ஆண்டு அனு­ப­வம் உள்ள தோல் மருத்­து­வ­ரும் ‘ரத்­னம்’ஸ் அலர்ஜி அண்ட் ஸ்கின் கிளி­னிக்’ இயக்­கு­ன­ரு­மான டாக்­டர் கே.வி. ரத்­னம், எத்­த­கைய சரு­மத்­தை­யும் அனு­ப­வம் வாய்ந்த அழ­குக்­கலை நிபு­ணர் ஒரு­வர், ‘லேசர்’ முறை மூலம் பாது­காப்­பாக மேற்­கொள்ள முடி­யும் என்­றார்.

லேசர் செய்­த­தும் சரு­மம் வீங்­கு­வ­தும் சிவந்து போவ­தும் இயல்­பு­தான் என்ற டாக்­டர் ரத்­னம், சில சம­யங்­களில் சரி­யான முறை­யில் செய்­யா­விட்­டால் சரு­மம் எரிந்­து­வி­டு­வ­தற்கு வாய்ப்­புண்டு என்று குறிப்­பிட்­டார். அத­னால் அழ­குக்­கலை நிபு­ணர் அனு­ப­வம் மிக்­க­வ­ராக இருக்க வேண்­டு­மென்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

‘லேசர்’ போன்ற சேவை களுக்கு வாடிக்­கை­யா­ளர்­கள் கூடு­தல் செலவு செய்­யத் தயா­ராக இருக்க வேண்­டும். இந்­தக் கூடு­தல் செல­வால் எவ்­வி­தப் பக்­க­வி­ளை­வு­களும் இருக்­கக்­ கூடாது என்ற எதிர்­பார்ப்­பும் சில­ரி­டையே நில­வு­கிறது என்று டாக்­டர் ரத்­னம் கூறி­னார்.

புதிய தொழில்­நுட்­பங்­கள்

ஐபி­எல், லேசர், திரெ­டிங், வேக்­சிங் உள்­ளிட்ட பழக்­கப்­பட்ட சேவை­க­ளைத் தவிர புத்­தம்­பு­திய முடி அகற்­றும் முறை­களை அழ­குப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னங்­கள் அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கின்­றன. இவை வேக­மா­கச் செயல்­ப­டு­வது­டன் பாது­காப்­பா­க­வும் உள்­ள­தாக அவை கூறின.

அவற்­றில் ஒன்­றான ‘அலங்­காரா எஸ்த்­தெ­டிக்ஸ்’ அழகு நிலை­யத்­தில் ‘சூப்­பர் ஹேர் ரிமூ­வல்’, ‘பிளாட்­டி­னம் ப்ரோ ஹேர் ரிமூ­வல்’ போன்ற சேவை­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

அதன் இயக்­கு­நர் ஷினி ராமாஷ், 29, ‘பிளாட்­டி­னம் ப்ரோ’ சேவை போன்ற சேவை­களை ஆண் வாடிக்­கை­யா­ளர்­களும் நாடி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

மேலும், ஒரு­வ­ரின் சரு­மத்­தை­யும் முடி­யை­யும்­விட இத்­தொ­ழில்­நுட்­பம் முடி­யின் வேரை மட்­டும் குறி­வைத்து அகற்ற வல்­லது.

தன்­னம்­பிக்கை தரும் பரா­ம­ரிப்பு

அழ­கா­கத் தோற்­ற­ம­ளிப்­ப­தற்­காக மட்­டு­மல்ல சில பெண்­கள் முடியை நீக்­கு­வ­தால் தன்­னம்­பிக்கை கூடு­வ­தா­கக் கூறி­னர்.

முடி அகற்­று­வதை 27 வயது சௌந்­தர்யா, ஒரு வழக்­க­மா­கவே கொண்­டுள்­ளார். முடி­நீங்கி வித­வி­த­மான உடை­களை அணிந்து வெளியே அல்­லது வேலைக்­குச் செல்­லும்­போது தன்­னம்­பிக்கை கூடு­வ­தா­க­வும் மெரு­கே­றிய உணர்­வைப் பெறு­வ­தா­க­வும் சொன்­னார்.

இள­மை­யில் தொடங்­கிய மாத­ரும் ஐம்­ப­து­க­ளி­லும் தங்­கள் தேவைக்­கேற்ற முடி நீக்­கும் சேவை­களை காலத்­துக்கு ஏற்ப மாற்றி வரு­கின்­ற­னர்.

நிதித் துறை­யில் பணி­பு­ரி­யும் ரேகா தரு­ம­லிங்­கம், 43, கடந்த 20 ஆண்­டு­க­ளாக கைக­ளி­லும் கால்­க­ளி­லும் இருக்­கும் முடியை அகற்றி வரு­கி­றார்.

இரண்டு அல்­லது மூன்று வாரங்­க­ளுக்கு ஒரு முறை அழகு நிலை­யங்­க­ளுக்­குச் செல்­லும் இவர், உட­லி­லும் முகத்­தி­லும் இருக்­கும் முடி, தம்மை ஓர் ஆண் போல் காட்­டு­வ­தா­கக் கரு­தி­னார்.

முடி­யைப் பிடுங்­கும்­போது தோல் நாள­டை­வில் தொங்­கி­ விடும் என்ற இவர், ‘வேக்­சிங்’ செய்து­கொள்­கி­றார். ‘லேசர்’ சேவைக்­குச் சென்ற தம் தோழி­யின் தோலில் வரி­வ­ரி­யாக வரத் தொடங்­கி­ய­தால் பாது­காப்பு கார­ண­மாக ரேகா வேக்­சிங் மட்­டுமே செய்து வரு­கி­றார்.

சுமார் 30 ஆண்­டு­க­ளாக தமது அழ­கைப் பாது­காத்­துக்­கொள்ள 56 வயது சரஸ்­வதி, முடி நீக்­கு­வதை வழக்­க­மாக்­கிக்­கொண்­டுள்­ளார். அழகு நிலை­யங்­க­ளுக்­குச் செல்­லா­மல் மாதம் ஒரு முறை தமது முடி­யைத் தாமே அகற்­றிக் கொள்­கி­றார்.

முடியை அகற்­று­வ­தால் உடல் சுத்­த­மா­கத் தோன்­று­வ­தா­கக் கூறிய இவர், இத­னால் அழகு கூடு­வ­தா­க­வும் தம்மை பிறர் மதிப்­ப­தா­கக் கரு­து­வ­தா­கவும் சொன்­னார். தக­வல் தொழில்­நுட்பத் துறை­யில் பணி­பு­ரி­யும் இவர், புரு­வம் திருத்­து­வ­து­டன் அக்­கு­ளில் இருக்­கும் முடியை அகற்றி வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!