ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்க்கு ஆகச் சிறந்த பிறந்தநாள் பரிசு!

பெங்களூரு: பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் சதமடித்து அசத்தினர்.

அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் மார்ஷ் அடித்த இரண்டாவது சதம் இது. போட்டி நாளான அக்டோபர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமைதான் அவரது பிறந்தநாள். இது அவருக்கு 32வது பிறந்தநாள்.

சரியாக 100 பந்துகளில் 100 ஓட்டங்களை எட்டிய அவர், 108 பந்துகளில் 121 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

வார்னருக்கு அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் இது 21வது சதம். அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிராகக் கடைசியாக அவர் ஆடிய நான்கு ஒருநாள் போட்டிகளிலும் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வார்னர் பத்து ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், அவரை ஆட்டமிழக்கச் செய்ய வாய்ப்பு கிடைத்தும் எதிரணியினர் அதனைக் கோட்டைவிட்டனர்.

பின்னர் சிறப்பாக ஆடிய வார்னர், 85 பந்துகளில் 100 ஓட்டங்களை எட்டினார். அவர் 124 பந்துகளில் 163 ஓட்டங்களை விளாசி, ஆட்டமிழந்தார்.

வார்னரும் மார்ஷும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 259 ஓட்டங்களைக் குவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!