இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டி நடக்கும் அரங்கில் மின்சாரம் இல்லை!

ராய்ப்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் விளையாட்டரங்கில் டிசம்பர் 1ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

ஆயினும், போட்டி தொடங்க சில மணி நேரமே உள்ள நிலையில், அந்த அரங்கின் சில பகுதிகளில் மின்விநியோகம் இல்லை. காரணம், கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து மின்கட்டணம் செலுத்தாததுதான்!

அந்த அரங்கம் 3.16 கோடி ரூபாய் மின்கட்டண நிலுவை வைத்துள்ளது. அதனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அரங்கிற்கான மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் கேட்டுக்கொண்டதையடுத்து, தற்காலிக இணைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஆனால், அது பார்வையாளர் அமரும் பகுதிக்கு மட்டுமே மின்சாரம் வழங்கும். உயரத்திலிருந்து திடலுக்கு ஒளிதரும் விளக்குகளுக்கு மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலமே மின்சாரம் வழங்கப்பட்டாக வேண்டிய நிலை.

கடந்த 2018ல் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து அவ்வரங்கம் மூன்று அனைத்துலகப் போட்டிகளை நடத்தியுள்ளது.

அரங்கின் பராமரிப்புப் பணிகளை மாநிலப் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. மற்றச் செலவுகளுக்கு விளையாட்டுத் துறை பொறுப்பேற்கிறது.

இந்நிலையில், மின்கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில்தான் பிரச்சினை என்றும் மின்கட்டணம் செலுத்தப்படாமைக்கு இரு அமைப்புகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன என்றும் என்டிடிவி செய்தி கூறியது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 முதலிரு போட்டிகளில் இந்தியாவும் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!