ஒரே பிரிவில் பிஎஸ்ஜி, மேன் சிட்டி

2021/2022க்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளின் தேர்வுச் சுற்றுகள்

இஸ்தான்புல்: லயனல் மெஸ்ஸியின் புதிய குழுவான பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) குழுவும் இங்கிலாந்தின் வலுவான குழுக்களில் ஒன்றான மான்செஸ்டர் சிட்டியும் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன.

2021/2022ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளின் தேர்வுச் சுற்றுகளுக்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதன் மூலம் எந்தெந்த குழுக்கள் எந்தெந்த பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி 'ஏ' பிரிவில் பிஎஸ்ஜி, மேன் சிட்டி குழுக்களுடன் ஜெர்மனியின் ஆர்பி லெப்ஸிக், பெல்ஜியத்தின் கிளப் புருகே ஆகியவையும் உள்ளன.

இதன் மூலம் ஐரோப்பாவின் இரு பெரும் பணக்கார காற்பந்துக் குழுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளவிருக்கின்றன.

'பி' பிரிவில் ஸ்பெயினின் அட்லெட்டிக்கோ மட்ரிட், இங்கிலாந்தின் லிவர்பூல், போர்ச்சுகலின் எஃப்சி போர்ட்டோ, இத்தாலியின் ஏசி மிலான் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள குழுக்கள் போர்ச்சுகலின் ஸ்போட்டிங் லிஸ்பன், ஜெர்மனியின் பொருஷியா டோட்மண்ட், நெதர்லாந்தின் அயக்ஸ் ஆம்ஸ்டடாம், துருக்கியின் பெசிக்டாஸ்.

'டி' பிரிவில் இத்தாலியின் இன்டர் மிலான், ஸ்பெயினின் ரியால் மட்ரிட், உக்ரேனின் எஃப்சி ஷக்தார் டொனேட்ஸ்க், முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருக்கும் மோல்டோவாவின் எஃப்சி ஷெரிஃப் டிராஸ்போல் ஆகியவை உள்ளன.

ஜெர்மனியின் பயர்ன் மியூனிக், ஸ்பெயினின் பார்சிலோனா, போர்ச்சுகலின் பென்ஃபிக்கா, உக்ரேனின் எஃப்சி டைனமோ கீவ் ஆகியவை 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ளன.

'எஃப்' பிரிவில் ஸ்பெயினின் வில்லாரியல், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், இத்தாலியின் அட்டலான்டா, சுவிட்சர்லாந்தின் யங் பாய்ஸ் ஆகியவை தேர்வுச் சுற்றுகளில் போட்டியிடும்.

இவ்வாண்டு யூரோப்பா கிண்ண இறுதியாட்டத்தில் வில்லாரியலும் மென் யுனைடெட்டும் பொருதியதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த இரு குழுக்களும் மீண்டும் ஒன்றோடு ஒன்று பொருத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

'ஜி' பிரிவில் பிரான்சின் லோஸ் லில், ஸ்பெயினின் செவியா, ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க், ஜெர்மனியின் வூல்வ்ஸ்பர்க் ஆகியவை உள்ளன.

'எச்' பிரிவில் இங்கிலாந்தின் செல்சி, இத்தாலியின் யுவெண்டஸ், ரஷ்யாவின் கிளப் ஸெண்ட், சுவீடனின் மல்மோ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

முதலாவது பிரிவு ஆட்டங்கள் அடுத்த மாதம் 14ஆம் தேதியும் 15ஆம் தேதியும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் லீக்கின் மாபெரும் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!