ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்

ஓமான்: இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவிற்காக கிரிக்கெட் விளையாடி வரும் ஜஸ்கரன் மல்ஹோத்ரா, ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களைப் பறக்கவிட்டு, சாதனை படைத்தார்.

பாப்புவா நியூ கினிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஒருநாள் போட்டியின் 50வது ஓவரில் ஜஸ்கரன் இந்த அரிய சாதனையை நிகழ்த்தினார். 124 பந்துகளை எதிர்கொண்ட அவர், 16 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 173 ஓட்டங்களைக் குவித்தார். அனைத்துலகப் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதமும் இதுவே. அமெரிக்க அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களைக் குவிக்க, அடுத்து பந்தடித்த பாப்புவா நியூ கினி 137 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

முன்னதாக, ஒருநாள் போட்டிகளில் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷெல் கிப்சும் டி20 போட்டிகளில் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கும் வெஸ்ட் இண்டீசின் கைரன் பொல்லார்டும் இப்படி ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்து வியக்க வைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!