முதலிடத்தில் சகல்
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியோர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் விளையாடிவரும் இந்திய வீரர் யுஸ்வேந்திர சகல். அவர் இதுவரை 142 போட்டிகளில் ஆடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டுவைன் ஓய்வுபெற்று விட்ட நிலையில், சகல் நடப்பு ஐபிஎல் தொடரிலேயே அவரை விஞ்சிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாஹாவால் சிரிப்பலை
அகமதாபாத்: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கெதிராக ஞாயிறன்று நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரித்திமான் சாஹா சிரிப்பலையை ஏற்படுத்தினார். இடைவேளைக்குப்பின் திடலுக்குத் திரும்பியபோது தமது காற்சட்டையின் முன்பக்கம் பின்புறமாக இருந்தபடி, அவர் தலைகீழாக அணிந்து இருந்ததைக் கண்டு முகம்மது ஷமி, ஹார்திக் பாண்டியா உள்ளிட்ட சக வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.