41 ஆண்டு சாதனையை முறியடித்த போப்

லண்­டன்: அயர்­லாந்து அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் போட்­டி­யில் இரட்டை சத­ம­டித்­த­தன்­மூ­லம் இங்­கி­லாந்து கிரிக்­கெட் வர­லாற்­றில் சாத­னை­யா­ளர்­கள் பட்­டி­ய­லில் தமது பெயரை இடம்­பெ­றச் செய்­தார் ஒல்லி போப் (படம்).

இங்­கி­லாந்து-அயர்­லாந்து மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இம்­மா­தம் 1ஆம் தேதி லண்­டன் லார்ட்ஸ் விளை­யாட்­ட­ரங்­கில் தொடங்­கி­யது. முத­லில் பந்­த­டித்த அயர்­லாந்து அணி 172 ஓட்­டங்­களில் சுருண்­டது. இங்­கி­லாந்து வேகப் பந்­து­வீச்­சா­ளர் ஸ்டூ­வர்ட் பிராட் ஐந்து விக்­கெட்­டு­க­ளைச் சாய்த்­தார்.

அடுத்து தனது முதல் இன்­னிங்­சைத் தொடங்­கிய இங்­கி­லாந்து அணி மள­ம­ள­வென ஓட்­டம் குவித்­தது. தொடக்க வீரர் பென் டக்­கெட் 178 பந்துகளில் 182 ஓட்­டங்­களை விளா­சி­னார்.

மூன்­றா­வ­தா­கக் கள­மி­றங்­கிய போப் 205 ஓட்­டங்­கள் எடுத்து ஆட்­டம் இழந்­தார். அவர் 207 பந்­து­களில் 200 ஓட்­டங்­க­ளைத் தொட்­டார். இதன்­மூலம் இங்­கி­லாந்து மண்­ணில் அதி­வே­க­மாக இரட்டை சதம் அடித்­த­வர் என்ற பெரு­மையை அவர் பெற்­றார். முன்னதாக, 1982ஆம் ஆண்டு இயன் போத்தம் 220 பந்துகளில் இரட்டை சதமடித்திருந்தார்.

முதல் இன்­னிங்­சில் இங்­கி­லாந்து நான்கு விக்­கெட் இழப்­பிற்கு 524 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!