இந்தியா-பாகிஸ்தான் காற்பந்து ஆட்டத்தில் மோதல்

பெங்களூரு: தெற்காசிய காற்பந்துச் சம்மேள வெற்றியாளர் காற்பந்து ஆட்டத்தில் புதன்கிழமை பாகிஸ்தானை இந்தியா 4-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்திய அணித் தலைவர் சுனில் செத்ரி அடித்த ‘ஹாட்ரிக்’ கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஆனால், பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களில் மோதல் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் இரு அணிகளுக்கும் இடையே மோதலுக்கு குறைவில்லை.

இரு அணி ஆட்டக்காரர்களுக்கு இடையே மட்டுமின்றி அணி பயிற்றுவிப்பாளர்களும் மோதலில் ஈடுபடும் அளவிற்கு ஆட்ட நிலவரம் மோசமடைந்தது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி பயிற்றுவிப்பாளர் இகர் ஸ்டிமேக்கிற்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால் ஆட்ட நடுவர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து ஆட்டம் தொடர்ந்தது.

இந்திய அணி அடுத்ததாக நேப்பாளத்துக்கு எதிராக சனிக்கிழமை விளையாடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!