இங்கிலாந்தை வெளியேற்றத் துடிக்கும் இந்தியா

லக்னோ: உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 29ஆவது ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் இங்கிலாந்தை இந்தியா ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு லக்னோ விளையாட்டரங்கில் நடக்கிறது.

இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

இந்தியாவின் பலம் பந்தடிப்பாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தொடக்கநிலை பந்தடிப்பாளர்கள் ஓட்டங்கள் எடுக்கவில்லை.

ஆனால் அதன்பின்னர் அணித் தலைவர் ரோகித் சர்மா, ‌ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் சீராக ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கைத் தருகின்றனர்.

விராத் கோஹ்லி 354 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னேறி வருகிறார்.

ஹார்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீளாததால் அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் இன்னும் சில ஆட்டங்களிலும் பங்கேற்கமாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது இந்தியாவிற்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

லக்னோ ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் அணியில் இடம்பெறக்கூடும்.

குல்திப் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தடுமாறினார், அவர் லக்னோவில் மீண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது ‌‌ஷமி கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் தனது வேகத்தால் இங்கிலாந்தை நிலைகுலைய வைக்கலாம்.

தொடர் தோல்வி:

இங்கிலாந்து அணி இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மற்ற நான்கு ஆட்டங்களிலும் அது மோசமாக தோல்வியடைந்தது.

இங்கிலாந்தின் பலமாக பார்க்கப்பட்ட பந்தடிப்புப் பிரிவு தற்போது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த உலகக்கிண்ணத்தில் அந்த அணியின் பந்தடிப்பாளர்கள் யாரும் சரியாக ஓட்டங்கள் குவிக்கவில்லை. அதேபோல் பந்துவீச்சாளர்களும் ஓட்டங்களை வாரிவழங்கியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராகவும் இங்கிலாந்து தோற்றுவிட்டால் அதன் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும். அதனால் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக தனது முழுபலத்தையும் காட்டக்கூடும்.

அணித் தலைவர் ஜா‌ஷ் பட்லர், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் தங்களது அனுபவத்தை இந்த ஆட்டத்தில் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!