நேருக்கு நேர்: களத்தில் இறங்கும் ஆர்சனல், லிவர்பூல்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் விருதை வெல்லும் போட்டியில் ஈடுபட்டிருக்கும் லிவர்பூலும் ஆர்சனலும் ஞாயிற்றுக்கிழமையன்று (4 பிப்ரவரி) மோதுகின்றன.

லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது லிவர்பூல். ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் அக்குழுவுக்குப் பின்னால் உள்ளது ஆர்சனல்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் லிவர்பூலை வென்றால் தனது குழுவால் மீண்டும் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் தீவிரமாக இறங்க முடியும் என்று ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா நம்புகிறார்.

20 ஆண்டுகளில் முதன்முறையாக லீக் விருதை வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது ஆர்சனல்.

இப்பருவத்தில் முன்னதாக லீக்கில் இவ்விரு குழுக்களும் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் அரங்கில் சந்தித்த ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆர்சனல் லீக் பட்டியலில் முதலிடம் வகித்தது.

ஆனால், அதற்குப் பிறகு நடந்த சில ஆட்டங்களில் அக்குழு தடுமாறியதைத் தொடர்ந்து லிவர்பூல் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

எனினும், அதற்குப் பிறகு கடந்த சில ஆட்டங்களாக ஆர்சனல் மீண்டு வந்துள்ளது. லீக்கில் கிறிஸ்டல் பேலஸ், நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் ஆகிய குழுக்களை வென்றது ஆர்சனல்.

“நாங்கள் எங்கள் சொந்த அரங்கில் விளையாடப்போகிறோம். அங்கு உற்சாகம் நிறைந்திருப்பதையும் எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் உணர்கிறேன்,” என்றார் அர்ட்டெட்டா.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்சனல் தனது சொந்த அரங்கான எமிரட்சில் மான்செஸ்டர் சிட்டியை வென்றது. அதேபோல் அக்குழு, லிவர்பூலையும் வெல்லும் நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

“இதுவரை இந்தப் பருவத்தில் நாங்கள் பெரிய குழுக்களை வென்றிருக்கிறோம். இப்போது லிவர்பூலை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடவேண்டும். அந்த வகையில் கடந்த இரண்டு ஆட்டங்களில் வென்றுள்ளோம். மூன்றாவது ஆட்டத்திலும் வெல்ல எண்ணம் கொண்டுள்ளோம். குறிப்பாக சொந்த மண்ணில் எங்கள் ரசிகர்களின் முன்னிலையில் அதைச் செய்ய விரும்புகிறோம்,” என்று அர்ட்டெட்டா நம்பிக்கை தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் மற்ற பிரிமியர் லீக் ஆட்டங்களில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டைச் சந்திக்கிறது மான்செஸ்டர் யுனைடெட், செல்சியும் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சும் மோதுகின்றன. போர்ன்மத், நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டைச் சந்திக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!