குகேஷ் - பிரக்ஞானந்தா ஆட்டம் சமநிலையில் முடிந்தது

பிராக்: செக் குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் சதுரங்க தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 7வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா - டி.குகேஷ் ஆகியோர் நேருக்கு நேர் மோதினார்கள்.

இந்த ஆட்டம் 91வது நகர்த்தலின்போது சமநிலையில் முடிவடைந்தது. 37வது நகர்த்தலின்போது பிரக்ஞானந்தா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர், தவறான நகர்த்தலை மேற்கொண்டதால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.

7 சுற்றுகளின் முடிவில் உஸ்பெக்கிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டரோவ் 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ 4.5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, செக்குடியரசின் நுயென் தான் டாய் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

செக் குடியரசின் டேவிட் நவரா, ருமேனியாவின் ரிச்சர்ட் ராப்போர்ட் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளையும் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்தியாவின் டி.குகேஷ் ஆகியோர் தலா 3 புள்ளிகளையும், போலந்தின் மாட்யூஸ் பார்டெல் 2.5 புள்ளிகளையும், இந்தியாவின் விதித் குஜராத்தி 2 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!