ரூ.1 கோடி சாமி சிலைகள் பறிமுதல்; ஏழு பேர் கைது

மேல்­ம­ரு­வத்­தூர்: மேல்­ம­ரு­வத்­தூர் அருகே விற்­ப­னைக்­கா­கக் கொண்டு செல்­லப்­பட்ட மிக­வும் தொன்­மை­வாய்ந்த சிலை­களை சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு போலி­சார் பறி­மு­தல் செய்­த­னர்.

இவற்­றின் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்­ப­டு­கிறது.

செங்­கல்­பட்டு மாவட்­டம், மேல்­ம­ரு­வத்­தூர் சித்­தா­மூர் சந்­திப்பு அருகே நேற்று அதி­காலை 4 மணி அள­வில், போலி­சார் வாக­னச் சோத­னை­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது மோட்­டார் சைக்கி ளில் வந்த இரு­வ­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், தொன்­மை­யான மீனாட்சி அம்­மன் சிலை உள்­பட சாமி சிலை­களை ரூ.1 கோடிக்கு விற்­ப­தற்­காக மோட்­டார் சைக்­கி­ளில் எடுத்­துச்­செல்­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

விசா­ர­ணை­யில், இந்­தச் சிலை விற்­ப­னை­யில் மேலும் ஐவ­ருக்­குத் ெதாடர்­புள்­ள­தா­க­வும் கூறி­னர்.

இதை­ய­டுத்து, சிலை­களை விற்க முயன்ற கார்த்­திக், 29, மூர்த்தி, 33, சுந்­த­ர­மூர்த்தி, 25, கும­ரன், 30, அசோக், 33, அறி­வ­ரசு, 43, அப்­துல்­ர­கு­மான், 24, ஆகிய எழு­வரை கைது செய்­த­னர்.

விசா­ர­ணை­யில் வேலூ­ரில் பொய்­கை­யாற்­றில் மண­லில் புதைக்­கப்­பட்ட ஒரு தொன்­மை­யான ரிஷ­பச் சிலை­யும் மீட்­கப்­பட்­டது. இத­னைத்­தொ­டர்ந்து குற்­ற­வா­ளி­கள் ஏழு பேரை­யும் கூடு­தல் குற்­ற­வி­யல் தலைமை நடு­வர் நீதி­மன்ற நீதி­பதி பாண்டி மகா­ராஜா முன்பு முன்­னி­லைப்படுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!