வடமாநிலத்தவர்கள் 300 பேர் மோசடி

சென்னை: மத்­திய அர­சுப் பணியில் சேர்­வ­தற்­காக போலிச் சான்றிதழ்களை அளித்­துள்ள 300 வட மாநிலத்தவர்கள் குறித்து விசா­ரணை நடந்து வரு­கிறது. இவர்­கள் தமி­ழகத்­தின் பல்­வேறு பகு­தி­களில் உள்ள மத்­திய அரசு அலு­வ­ல­கங்­களில் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.

இந்த மோசடி விவ­கா­ரம் குறித்து வெளி­வ­ரும் தக­வல்­கள் மத்­திய அரசு ஊழி­யர்­கள் மத்­தி­யில் பர­பரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தமி­ழ­கத்­தில் கிராம தபால் நிலைய ஊழி­யர்­கள், மத்­திய ரிசர்வ் காவல் படை, ரயில்வே ஆகி­ய­வற்­றில் காலி­யாக உள்ள பணி­யி­டங்­க­ளுக்குத் தேர்வு பெற்­ற­வர்­கள் அளித்­துள்ள சான்­றி­தழ்­கள் வழக்­க­மான நடை­மு­றை­யின் கீழ் தொடக்க நிலை ஆய்­வுக்கு உட்­படுத்­தப்­பட்­ட­போது, அதி­கா­ரி­க­ளுக்கு திடீர் சந்­தே­கம் எழுந்­தது.

குறிப்­பாக வட மாநி­லங்­கள், கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த சில­ரது சான்­றி­தழ்­க­ளின் நம்­ப­கத்­தன்மை குறித்து சந்­தே­கம் எழுந்­த­தா­க­வும் குறிப்­பாக பத்­தாம் வகுப்­புக்­கான மதிப்­பெண் சான்­றி­தழ் போலி­யாக இருக்­கும் என்­றும் அவர்­கள் சந்தே­கித்­துள்­ள­னர்.

பீகார், ஜார்­க்கண்ட், கர்நாடகாவைச் சேர்ந்த பலர் தமி­ழ­கத்­தில் உள்ள பள்­ளி­களில் படித்­தது போல போலிச் சான்­றி­தழ்­களை அளித்­துள்­ள­னர்.

அந்­தச் சான்­றி­தழ்­களை தமி­ழக பள்­ளிக்­கல்­வித்­துறை அளித்­தது­போல் நாட­க­மாடி உள்­ள­னர். ஆனால் அனைத்து போலி மதிப்­பெண் சான்­றி­தழ்­களும் ஒரே மாதி­ரி­யாக காட்­சி­ய­ளித்­துள்­ளன. பெயர்­கள் மட்­டுமே மாறி உள்­ளன என்­ப­தைக் கவ­னித்த அதி­கா­ரி­கள், இதில் மோசடி நடந்­தி­ருப்­பதை புரிந்துகொண்­ட­னர்.

இதை­ய­டுத்து சான்­றி­தழ்­களைச் சரி­பார்ப்­பது என முடி­வா­னது. அதன்படி சந்­தே­கத்­துக்கு இடமளிக்­கும் வகையில் உள்ள சுமார் சில­ நூறு சான்­றி­தழ்­களை சம்­பந்­தப்­பட்ட மத்­திய அர­சுத் துறை­கள், தமி­ழக பள்­ளிக்­கல்­வித்­து­றைக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

தமி­ழக அரசு உட­ன­டி­யாக உரிய நட­வ­டிக்கை மேற்­கொண்­டதை அடுத்து, மத்­திய அர­சுத்­து­றை­கள் அனுப்­பி­ய­தில் சுமார் 300 சான்­றி­தழ்­கள் போலி­யா­னவை என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து இந்த மோச­டி­யில் தொடர்­பு­டைய ஊழி­யர்­கள் தொடர்­பாக அவர்­க­ளு­டைய சொந்த மாநி­லங்­களில் உள்ள காவல்­து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

அவர்­கள் தமி­ழக பள்­ளிக்­கல்வி­யின் கீழ்­வ­ரும் மாநில அரசு தேர்­வுத்­து­றை­யு­டன் இணைந்து சான்­றி­தழ்­க­ளைச் சரி­பார்க்­கும் நட­வடிக்­கையைத் தொடங்கி உள்ள­னர். போலி மதிப்­பெண் சான்­றி­தழ்­களை கொடுத்து மத்­திய அர­சுப் பணி­யில் சேர்ந்த குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டதை அடுத்து கர்­நா­டகா­வைச் சேர்ந்த இரு­வர் அம்­மா­நில காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மற்ற மாநிலத்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலி மதிப்பெண் சான்றிதழை அளித்து வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பது விவாதப் பொருளாகி உள்ளது.

போலிச் சான்றிதழ் கொடுத்து மத்திய அரசுப் பணியில் சேர்ந்தனர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!