காவல் ஆணையர்: சென்னையில் உள்ள அனைத்து ரவுடிகளும் ஒடுக்கப்படுவர்

சென்னை: ரவுடிகள் இல்லாத மாநகரமாக சென்னை மாநகரை மாற்ற அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

புதிய காவல் ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் குறைகளுக்கு காவல்துறை உடனடியாக தீர்வு காண வேண்டும் என தாம் வலியுறுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“எதிர்காலத்தில் மாதம் ஒருமுறை இதுபோன்ற குறைதீர்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் எழுதித் தரவேண்டும். இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருக்கிறது,” என்றார் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

இணையக் குற்றங்கள் (சைபர் கிரைம்) தொடர்பாக துரித கதியில் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சென்னையில் ரவுடிகளின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

“ரவுடிகளுக்கு எதிராக சென்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம்.

“எனவே ரடிவுகள் இல்லாத மாநகரமாக சென்னை மிக விரைவில் மாறும். காவல்துறை அதை உறுதி செய்யும்,” என்றார் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

சென்னையில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டதாகவும் குறிப்பாக இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!