நேசித்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் முகத்தை கடைசியாக ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடன் ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்தனர்.

விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் போது பல்லாயிரக் கணக்கானோர் வழிநெடுகிலும் சாலையின் இருமருங்கிலும் கூடி நின்று கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கட்சி வேறுபாடு இன்றி ஏராளமானோர் பங்கேற்ற அமைதி ஊர்வலங்கள் நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயகாந்தின் தீவிர தொண்டர்கள் சிலர் மொட்டை அடித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள் பலர் ‘கேப்டன் வாழ்க’ என்று முழங்கி ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினர்.

இறுதிச் சடங்கு நடைபெற்ற தேமுதிக அலுவலகத்திற்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அலுவலகத்தின் நுழைவாயில், பின்பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததால் பலர் சுவரேறிக் குதித்து நுழைய முயன்றனர். காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விஜயகாந்த் தேமுதிக தலைமையகத்தை மிகவும் நேசித்தார். தலைமையகத்தின் பின்புறம் வழியாகவே அவர் எப்போதும் வருகை தருவார்.

எனவேதான், அவர் மிகவும் நேசித்த இடத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கனவு வீட்டில் குடியேறுவதற்குள் காலமானார்

சென்னையின் புறநகர்ப் பகுதியில் புது வீடு ஒன்றை ஆசையாகக் கட்டி வந்துள்ளார் விஜயகாந்த். அந்தப் பிரம்மாண்டமான வீட்டில் குடியேறும் முன்பே அவர் காலமாகிவிட்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அவரது கனவு வீட்டுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

மொத்தம் 20,000 சதுர அடியில் கட்டப்பட்டு வந்த கட்டடப் பணிகள் விரைவில் முழுமையாக முடிவடையும் எனத் தெரிகிறது. அண்மையில்தான் அந்தப் புது வீட்டிற்கு பால் காய்ச்சப்பட்டதாகவும் அதில் விஜயகாந்த் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

‘மனிதநேயம் கொண்ட அரசியல்வாதி’

விஜயகாந்தைப் போன்ற மனித நேயம் கொண்ட அரசியல்வாதியைப் பார்ப்பது அரிது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி தம்மை அனுப்பி வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

“விஜயகாந்த் தமிழக மக்களுக்காகப் பாடுபட்டது, பசியோடு வருபவருக்கு உணவு அளித்து அனுப்பியது உள்ளிட்ட தகவல்கள் நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அவர் மிகவும் இளகிய மனம் படைத்தவர். பிறர் சிரமப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்.

“எல்லாரும் சமமானவர்கள்தான் என்ற மனித நேயத்துடன் செயல்பட்ட அரசியல்வாதி,” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

‘நல்ல நண்பருக்கு விடை கொடுத்த கமல்’

தன்னுடைய நல்ல நண்பருக்கு விடை கொடுத்து விட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகள் விஜயகாந்த் போன்ற ஒருவருக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விஜயகாந்திடம் எந்த அளவுக்கு பணிவு இருந்ததோ அதே அளவுக்கு நியாயமான கோபமும் வரும். அவரது கோபத்தின் ரசிகன் நான். நல்ல நேர்மையாளருக்கு, நண்பருக்கு விடை கொடுத்து விட்டுச் செல்கிறேன்,” என்று கமலஹாசன் தெரிவித்தார்.

‘விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை’

விஜயகாந்தின் அன்புக்கு அனைவருமே அடிமையாகி விடுவார்கள் என்றும் அவருக்காக தங்கள் உயிரைக் கொடுக்கக் கூட தயாராக இருந்தனர் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் நட்சத்திரக் கலை விழாவை முடித்து விட்டு கிளம்பியபோது ரசிகர்கள் தம்மை சூழ்ந்து கொண்டதாக குறிப்பிட்ட அவர், அந்த கூட்டத்தை இரண்டொரு நிமிடங்களில் கலைத்து விஜயகாந்த் தம்மை பத்திரமாக அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.

“இத்தகைய உடல் பலம் கொண்ட ஒரு மனிதரை அவரது வாழ்க்கையின் கடைசி நாள்களில் பார்க்கும்போது வேதனையாக இருந்தது. வாழ்க விஜயகாந்த் நாமம்,” என்றார் ரஜினி.

கண்கலங்கிய விஜய், தொலைபேசியில் அஜித்

நடிகர் அஜித் நேரில் வர இயலாத நிலையில் தொலைபேசி வழியாக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். வெளிநாட்டுப் படப்பிடிப்பு இருப்பதால் தம்மால் வர இயலவில்லை என்றும், சில நாள்களுக்குப் பின் நேரில் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விஜயகாந்த் பார்க்கத்தான் கம்பீரமாக இருப்பாரே தவிர, பழகுவதில் அவர் ஒரு குழந்தையைப் போன்றவர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் இன்னும் சில காலம் நலமுடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

விஜயகாந்தின் இறுதிச்சடங்கை தொண்டர்களும் பொதுமக்களும் காண வசதியாக தேமுதிக தலைமையகத்துக்கு வெளியே எல்ஈடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன்’ என்று பொறிக்கப்பட்டிருந்தது.இறுதி ஊர்வலம் முழுவதும் ‘கேப்டன்’ என்ற முழக்கம் ஒலித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!