அம்பானி, அதானிக்காக தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார்: கனிமொழி

மதுரை: அம்பானி, அதானிக்காகத்தான் பிரதமர் மோடி ஆட்சியே நடத்துகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல விவசாயிகள் கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

மதுரையில் சு.வெங்கடேசனை ஆதரித்து வியாழக்கிழமை கனிமொழி எம்.பி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுதியும் பேசியும் வருகிறார் சு.வெங்கடேசன். அவரை இப்பகுதி மக்கள் நிச்சயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பாஜக தொடர்ந்து தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்து வருகிறது. அவர்கள் நம்மை மதிப்பதே கிடையாது.

“மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. ஜாப்பானுக்கு சென்று காசு வாங்கி வந்துதான் கட்ட வேண்டுமாம். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

“மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக, அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிக விமான நிலையங்கள் இருக்கின்றன. அதனால் மதுரையை அறிவிக்க முடியாது என தெரிவித்து விட்டனர்.

“பாஜகவில் இணைந்துவிட்டால், அனைவரும் குற்றமற்றவர்களாக மாறிவிடுவார்கள். இல்லையென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்துவார்கள். காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இரண்டு முதல்வர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துணை முதல்வர் மாதக் கணக்கில் சிறையில் இருக்கிறார். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பிணை கிடைக்கவில்லை.

“இப்படி எதிர்க்கட்சிகளை மிரட்டி ஆட்சி செய்யலாம் என நினைக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வரமாட்டார்கள், அப்படி வந்தால் இதுதான் கடைசி தேர்தல். சர்வாதிகாரம் மட்டும்தான் இருக்கும். நமது எதிர்காலத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். தேர்தல் தாள் என்பது இன்னொரு சுதந்திர நாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மதுரைக்குப் பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!