உல‌க‌ம்

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள ஆடை விற்பனைக் கடைகள் நோன்புப் பெருநாள் ஆடைகளை மலிவான விலையில் விற்பனை செய்கின்றன.
சிட்னி: சிறையிலடைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுன்னுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை அடிப்படையிலான மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் போகக்கூடும் என்று ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதர் திங்கட்கிழமை (மார்ச் 11) கூறியுள்ளார்.
புனித ரமலான் மாதம் மார்ச் 11ஆம் தேதி தொடங்குவதாக சவூதி அரேபியாவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் அறிவித்துள்ளன.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21க்கு அதிகரித்து உள்ளதாகவும் ஆறு பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) தெரிவித்தனர்.
கெய்ரோ: புனித ரமலான் மாதத்திற்கு முன்பு காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. ஆனால் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை உறுதி செய்ய சமரசப் பேச்சாளர்கள் முழு மூச்சுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் மார்ச் 9ஆம் தேதி தெரிவித்தது.