உல‌க‌ம்

லண்டன்: பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரன் இந்த வாரம் ஜோர்தானுக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொள்வார். அவர் அங்கு, காஸாவில் நிலையான போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஏற்பாடுகளை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சு டிசம்பர் 20ஆம் தேதி தெரிவித்தது.
லண்டன்/மியூனிக்: பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் இந்த விடுமுறைக் காலத்தில் ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டின் எண்ணிக்கையை மிஞ்சிவிட்டது.
பெட்டாலிங் ஜெயா: இஸ்‌ரேலில் செயல்பட்டு வரும் கப்பல் சரக்கு நிறுவனமான ‘ஸிம் இன்டெகிரேடட் ஷிப்பிங் செர்விசஸ்’, இஸ்‌ரேலுக்குத் திரும்பும் கப்பல்கள், அல்லது இஸ்‌ரேல் நாட்டுக் கொடியைத் தாங்கிய கப்பல்கள் என யாவும் மலேசியத் துறைமுகங்களில் நிறுத்துவதற்கு உடனடித் தடை விதித்துள்ளார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்.
ஜார்ஜ்டவுன்: பினாங்கின் பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் ராஜா உடாவில் டிசம்பர் 19ஆம் தேதி, 29 வயது நபர், ஒரு பெண்ணை கொன்றுவிட்டு பினாங்கு பாலத்திலிருந்து குதித்ததாகக் கூறப்பட்டது.
கெய்ரோ/காஸா: மனிதாபிமான உதவியை அதிகரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாக்கெடுப்பு தாமதமாகி இருக்கும் வேளையில் காஸாவில் புதன்கிழமை சண்டை தீவிரமடைந்தது.