சிங்க‌ப்பூர்

ஜாலான் புக்கிட் மேராவில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட காசநோய் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஊழியர்களுக்கு வேலையிடம் தொடர்பான காயங்கள் ஏற்படும்போது முதலாளிகள் மேலும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று மனிதவள அமைச்சு பிப்ரவரி 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
இணையத்தில் வாங்குவது தொடர்பாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) பெற்ற புகார்கள் 2023ஆம் ஆண்டில் 47 விழுக்காடு உயர்ந்தன. புகார்களில் ஐந்தில் ஒரு பங்கு, விமான நிறுவனங்கள், சுற்றுலா, ஹோட்டல் தொழில்கள் தொடர்பானவை.
அரசாங்க வாடகை வீடுகளில் வசித்த கிட்டத்தட்ட 8,300 குடும்பங்கள் 2014 முதல் 2023 வரை கடந்த பத்தாண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆஸ்திரேலியாவில் தம்முடைய மகனின் பல்கலைக்கழகப் படிப்புக்கு உதவ சிங்கப்பூரைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளார்.