வாழ்வும் வளமும்

10ஆம் நூற்றாண்டில் நடந்ததாக எழுத்தாளர் மா. அன்பழகனால் புனையப்பட்ட நாவல் “செம்பியன் திருமேனி”. தமிழகத்தின் மதுரை, திருவாரூர், நெய்வேலி, சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூல் இப்போது சிங்கப்பூரில் அறிமுகம் காணவிருக்கிறது.
வளர்தமிழ் இயக்கமும் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்யும் தமிழ்மொழி விழா 2024ன் ஒரு பகுதியாக, தமிழ்ச் செய்தியாளர் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஓராண்டுக்கு மேல் இயங்கி வருகிறது அனைத்துலக சிலம்பப் பயிலகம். 4 வயதிலிருந்து 33 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பலர் இந்தப் பயிலகத்தில் சிலம்பக் கலையைப் பயின்று வருகிறார்கள். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தேறிய ஆசிய சிலம்ப வெற்றியாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து மொத்தம் 30 பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளார்கள். 
பெண்களுக்கு ஆடைத் தேர்வில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது ‘ஃபேஷன்’ மாறினாலும் உடல்வாகு, சரும நிறத்துக்கேற்ற ஆடை நிறங்களையும் துணி வகைகளையும் தேர்வு செய்வது அவசியம்.
முந்தைய தலைமுறையினர் தம் மனநலத்தைப் பேணப் பயன்படுத்திய உத்தியான, எண்ணங்களைக் கைப்பட எழுதுதலை இன்றைய இளையர்களுக்கு அறிமுகப்படுத்தியது இளையர்களால் நடத்தப்பட்ட மனநலப் பயிலரங்கு.