தினமும் 16 மணிநேரம் சட்டவிரோத வேலை: மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட 13 பேர் கண்ணீர்

தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் வேலை தரு­வ­தா­கக் கூறி தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் உட்பட 300 பேர் இந்­தி­யா­வி­லி­ருந்து அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். மியன்­மா­ருக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட அவர்கள் அங்கு சட்­ட­வி­ரோத இணைய மோச­டிக் கும்­ப­லி­டம் சிக்­கித் துன்­பு­று­வ­தாக தக­வல் வெளி­யா­னது.

அத­னைத் தொடர்ந்து மியன்­மா­ரில் சிக்­கி­யி­ருக்­கும் இந்­தி­யர்­களை மீட்க இந்­திய வெளி­யு­ற­வுத் துறை நட­வ­டிக்கை எடுத்­தது. அந்த முயற்­சி­யின் பய­னாக 14 பேர் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­களில் 13 பேர் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­கள் நேற்று அதி­காலை சென்னை விமா­ன­நி­லை­யம் வந்­தி­றங்­கி­னர். தமி­ழக அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் அவர்­களை வர­வேற்­றார். எஞ்­சி­யுள்ள தமி­ழர்­களை மீட்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

மீட்­கப்­பட்ட 13 பேரில் ஒரு­வர் வெளி­நாட்­டில் தங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட இன்­னல்­கள் பற்றி விளக்­ ­கினார். "துபா­யில் வேலை செய்ய விண்­ணப்­பித்­தி­ருந்­தோம். துபாய் முக­வர் தாய்­லாந்­தில் வேலை இருக்­கிறது என்று கூறி அழைத்­துச் சென்­றார். பின்னர், 450 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள ஓர் இடத்­திற்கு எங்­களை அழைத்­துச் சென்­ற­னர். அங்­கி­ருந்த சீனர்­ குழு ஒன்று எங்­களைச் சட்­ட­வி­ரோ­த­மாக ஓர் ஆற்­றைக் கடக்­கச் செய்­தது.

"எங்­கள் கைப்­பே­சி­களை பறித்­துக்­கொண்­ட­னர். அதன் பின்­னரே நாங்­கள் இருப்­பது மியான்­மார் என்­பது தெரி­ய­வந்­தது. எங்­க­ளி­டம் விசா இல்லை. சட்­ட­வி­ரோ­த­மாக அங்கு இருந்­தோம். உள்­ளூர் ராணு­வம் எங்­க­ளைக் காப்­பாற்­றி­யது. அதற்கு முன்­ன­தாக, தினமும் 15 முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்ய கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டோம்," என்று கண்ணீருடன் விளக்­கி­னார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!