மோசடிக்கு துணைபோவோரை தண்டிக்க கடுமையான சட்டம்

சிங்­கப்­பூ­ரில் கடந்த மூன்­றாண்டு­களில் வங்கி மற்­றும் சிங்­பாஸ் கணக்­கு­களை மோச­டிக்­கா­ரர்­களி­டம் விற்­ற­தா­கப் பிடி­பட்ட 19,000 பேரில் ஒரு­சி­ல­ரைத் தவிர பெரும்­பா­லா­ன­வர்­க­ளைத் தண்­டிக்க இய­ல­வில்லை.

$1 பில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மோச­டிச் சம்­ப­வங்­களை வெளிச்­சத்­துக்­குக் கொண்­டு­வர உத­வி­ய­போ­தி­லும் அவர்­களில் பல­ரும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை.

கார­ணம், வங்கி, சிங்­பாஸ் கணக்­கு­களை குற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­காக வேண்­டு­மென்றே விற்­றார்­களா என்­பதை நிரூ­பிக்க தற்­போது நடப்­பில் உள்ள சட்­டப் பிரி­வு­கள் போது­மா­ன­தாக இல்லை. இருப்­பி­னும் தற்­போது உத்­தே­சிக்­கப்­பட்டு உள்ள சட்­டம் நிறை­வேற்­றப்­ப­டும்­போது இந்த நிலைமை மாற்­றம் காணும்.

தமக்­குத் தெரி­யா­மல் நடந்து­விட்­டது என்று அப்­போது கூறி தப்­பிக்க இய­லா­த­படி சட்­டம் கடு­மை­யா­ன­தாக இருக்­கும்.

தெரிந்தே பண மோச­டிக்­குத் துணை­போ­வோ­ரும் யாருக்­கா­வது தங்­க­ளது வங்கி, சிங்­பாஸ் கணக்­கு­களை விற்­போ­ரும் சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து தப்­பிக்க இய­லாத நிலை ஏற்­படும்.

அதற்­கேற்ற வகை­யில் ஊழல், போதைப்­பொ­ருள் கடத்­தல் மற்­றும் இதர கடு­மை­யான குற்­றங்­க­ளுக்­கான மசோதா திருத்­தப்­ப­டு­கிறது. திருத்­தங்­கள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அறி­மு­கம் செய்­யப்­பட்­டன.

பண மோச­டிக்­குத் துணை போவோ­ருக்கு எதி­ரா­க­வும் தங்­க­ளது சிங்­பாஸ் கணக்கை மோச­டிச் செய­லுக்­குத் தாரை வார்த்­துக் கொடுப்­போ­ருக்கு எதி­ரா­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கும் அதி­கா­ரத்தை காவல்­துறைக்கு வழங்க அந்­தத் திருத்த மசோதா வழி­வகை செய்­கிறது.

இவ்­வாறு மோச­டிக்­குத் துணை­போ­னது தொடர்­பாக 2020க்கும் 2022க்கும் இடைப்­பட்ட காலத்­தில் 19,000 பேர் காவல்­து­றை­யால் விசா­ரிக்­கப்­பட்­ட­தாக உள்­துறை அமைச்­சும் அறி­வார்ந்த தேசம் மற்­றும் மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­க­மும் கூட்­டாக வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. ஆனால், அவர்­களில் 250க்கும் குறை­வா­ன­வர்­கள் மீதே வழக்­குத் தொடர முடிந்­தது.

“திருத்­தப்­படும் சட்­டம் பொது­மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்­வை­யும் பணம் செலுத்­து­வ­தற்­கான கணக்கு மற்­றும் சிங்­பாஸ் கணக்­கைப் பயன்­ப­டுத்­து­வ­தில் பொறுப்­பு­மிக்க நடத்­தை­யை­யும் ஊக்­கு­விக்­கும்,” என்று கூட்­ட­றிக்கை குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் 2021, 2022 ஆகிய ஈராண்­டு­களில் மட்­டும் பொது­மக்­கள் $1.3 பில்­லி­யன் பணத்தை மோச­டி­களில் இழந்­துள்­ள­னர். 2021ஆம் ஆண்டு $632 மில்­லி­யன் பறி­போன நிலை­யில், அதற்­க­டுத்த ஆண்டு அந்­தத் தொகை அதி­க­ரித்து $660.7 மில்­லி­யன் ஆனது. அதே­நே­ரம், 2021ஆம் ஆண்டு உல­க­ள­வில் $77.2 பில்­லி­யன் பணம் மோசடி செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில், சிங்­பாஸ் கணக்­கு­களை விற்­கும் போக்கு சிங்­கப்­பூ­ரில் உரு­வெ­டுத்து வரு­வ­தாக கூட்­ட­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இத­னால், குற்­ற­வா­ளி­கள் புதிய பெயர்­களில் நிறு­வ­னங்­களைப் பதிவு செய்ய, வங்­கிக் கணக்­கு­க­ளைத் திறக்க, தொலை­பேசி சேவைக்­குப் பதிவு செய்ய, மோச­டி­க­ளை­யும் இத­ர குற்­றங்­க­ளை­யும் அரங்கேற்ற எளி­தா­கி­விட்­டது என்றும் அது கூறியது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!