உள்ளாடை விளம்பரத்தில் மலேசிய மலாய்/முஸ்லிம் பெண்: ஆதரவும் எதிர்ப்பும்

புகழ்பெற்ற உள்ளாடை நிறுவனமான ‘விக்டோரியா சீக்ரெட்’டின் புதிய விளம்பரத்தில் முதன்முறையாக மலேசியாவைச் சேர்ந்த மலாய்/முஸ்லிம் பெண் தோன்றியிருப்பதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

மலேசியப் பெண் புகைப்படக் கலைஞர்கள் சங்கக் குழுவினரால் அப்படம் எடுக்கப்பட்டது. தயாரிப்புக் குழுவிலும் முழுவதும் பெண்களே இருந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் யுனிவர்ஸ் மலேசியா’ ஜேன் டியோ, அமெரிக்காவில் பிறந்த தாய்லாந்து அழகி ஜேனி டியன்போசுவான் ஆகியோருடன் இணைந்து மலாய்/முஸ்லிம் பெண்ணான நியா அதாஷாவும் அப்படத்தில் தோன்றியுள்ளார்.

“உண்மையில் இது ஒரு கௌரவம். இது ஒரு பெரிய வாய்ப்பு. விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் முகமாக விளங்க வேண்டும் என்பது என் கனவு,” என்றார் 26 வயதான நியா.

அதுகுறித்த காணொளியையும் அவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பலவகைப்பட்ட பெண்களை அந்த விளம்பரக் காணொளி பிரதிநிதிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் சிலர் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

“பல இனப் பெண்கள் ஒரு விளம்பரப் படத்தில் தோன்றுவது நல்ல விஷயம்தான். ஆனால், உண்மையான, பலவகைப்பட்ட உடல்வாகு கொண்ட பெண்களும் இடம்பெற்றிருப்பதையும் விரும்புகிறோம்,” என்று ஜென்னி வோ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

“கருமைநிறத் தோல்கொண்ட, உடல்பருமனான பெண்கள் எங்கே?” என்று கேட்டுள்ளார் ரீனோஷா கிருஷ்ணசாமி என்பவர்.

ஒரு மலேசிய/தென்கிழக்காசியப் பெண்ணாக பிரதிநிதிக்கப்படவில்லை என்ற முரண்பாட்டை உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார் எஸ்.சுகாசினி.

இணையவாசிகள் சிலர் நியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நரகத்திற்குச் செல்லக்கூடிய முஸ்லிமுக்கு நியா ஓர் எடுத்துக்காட்டு அல்லது இறப்பிற்குப் பிந்திய அவரது விதிக்கு அவரது செயல்களே எண்ணெய் ஊற்றுவதாக உள்ளன என்று சிலர் கூறியுள்ளனர்.

ஆயினும், இணையவாசிகள் பலரும் திரு நியாவின், அவரது சக ஊழியர்களின் செயலைப் பாராட்டியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் நியாவையும் மலேசியப் பெண் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்புகொண்டு அவர்களின் கருத்தை அறிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!