திமிங்கில இனத்தைச் சேர்ந்த நான்கு கால் விலங்கு ஒன்றின் 43 மில்லியன் ஆண்டு புதைப்படிமம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திமிங்கிலங்கள் கடலுக்குள் வாழும் விலங்காக எப்படி மாறியது என்பதை எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதைப்படிமம் காட்டும் என நம்பப்படுகிறது.
புரோட்டோசெட்டைடெ (Protocetidae) இனத்தைச் சேர்ந்த அந்தத் திமிங்கிலத்தின் படிமம் எகிப்தின் மேற்கு பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக கடற்பகுதியாக இருந்த அந்த இடத்தில் இதுபோன்ற பல படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பியோமிக்கெட்டஸ் அனுபிஸ் என்ற அந்தத் திமிங்கிலத்தின் உடல்நீளம் கிட்டத்தட்ட மூன்று மீட்டர். இதன் எடை கிட்டத்தட்ட 600 கிலோகிராம்.